india
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-11-26 00:00

சுதந்திர இந்தியா

இலஞ்சத்தின் பிடியில்
அரசியல்வாதிகளின் -
இரும்புக் கரங்களுள்
சுதந்திர இந்தியா !
பாதுகாப்பும் தான் பறிபோய்
பல நாட்களும் ஆனதே !
அத்தியாவசியத் தேவைகளெல்லாம்
ஆகாச உயரத்திற்கு விலையேறிப் போனதே !
சுயநலமும் தான் அனைவர்
மனங்களையும் ஆட்கொண்டதே -
தேசத்தின் நினைப்பும் தான்
இல்லாமலேயே போனதே !
செல்வரெல்லாம் மென்மேலும்
கொழித்துக் கொண்டே போக
ஏழை எளியோரோ - நாளும்
துயரில் உழன்று கொண்டேயிருக்க
அடிப்படைக் கல்வி கூட நாளை
கனவான் வீட்டுக் கஜானாவினுள்
சிறையிருந்தாலும் - சற்றும்
ஆச்சயப்படுவதற்கில்லை!
கடமை உணர்ந்து தேசம் காத்திட்டால்
தேசம் நம் சொத்து ! - இல்லையேல்
தயாராய் இருக்க வேண்டும் -
இன்னுமோர் சுதந்திர வேள்விக்கு !!!

பி.தமிழ் முகில்
31.08.2013

- பி.தமிழ் முகில்
பாபரின் ஆன்மா !!

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை
தோண்டி எடுக்கப்படுகிறது
அரசியல் மந்திரவாதிகளால்
பாபரின் ஆன்மா!

இன்று பாபர் பிறப்பெடுத்திருப்பதோ
இராமச்சந்திரனின் பேரனாக!
பாபரும் ராமரும் ஒன்று
புரிந்தவர் வாழ்வு நன்று!

அறியாதவர் நாமென்று
அறிந்துகொண்ட அவர்களோ
ஆட்டிப்படைக்கின்றார் நம்மை!
ஆட்சிக்கான சூழ்ச்சியை விரட்டிடுவோம்!

தற்பெருமை பொறாமை
விட்டொழிப்போம்
தனித்துவமாய் வாழ்வோம்
தனித்தனியாக அல்ல!

ஒன்றுபட்டு இருப்போம்
என்றும் நாம் சகோதரராக!
உலகே வியந்துநோக்க
உயர்வோம் நல் இந்தியராக!

-சீர்காழி.சேதுசபா

- சீர்காழி.சேதுசபா, 2013-11-26
சுதந்திர இந்தியா…

பேதம் மறந்து
வேதனையுடன் போராடி
வென்ற சுதந்திரம்,
இன்று
பேதம் வளர்த்து
பிழைப்பு நடத்திடும்
பொய்(ம்)மை அரசியலார் கையில்..

இனிப்பாய் இலவசங்கள்,
நல்லதாய் நடிப்புக்கள்,
தேர்தல்கால அக்கரை,
தேனான பேச்சு
இவற்றுக்கெல்லாம் ஏமாந்து
தவறானவர்களைத் தேர்ந்தெடுத்து
திறந்தவெளிச் சிறையில்
தினம்தவிக்கும் பாமர மக்கள்..

வெளிச்சத்தைத் தேடும்
வேதனைக்குரல்கள் மாறிட,
வேண்டும் இன்னொரு சுதந்திரம்…!

-செண்பக ஜெகதீசன்…

- செண்பக ஜெகதீசன், 2013-11-26
ஐந்தாண்டுகள் ஆகிவிட்டதா
வருவதுபோல் தெரிகிறதே அதே பிச்சைக்காரன்
அம்மா தாயே ஓட்டுப்போடுங்க

கா.காஜாமைதீன்

- கா.காஜாமைதீன், 2016-03-28

Share with others