கதை முடிந்து
காவியமான காதலுக்கு,
சலவைக்கல்லில் செதுக்கிய
சாகாத கவிதாஞ்சலி-
தாஜ்மகால்...!
-செண்பக ஜெகதீசன்...
தாஜ்மஹால்
காதல் காவியமாய் நாம் கொண்டாடும்
தாஜ்மஹால் !!! – இங்கு
எத்தனை காதலிகளின்
கண்ணீரும் அழுகை ஓலங்களும்
ஒலிக்கின்றனவோ ???
ஏனெனில், இக் காதல் சின்னத்திற்கு
உயிர் கொடுத்த பிரம்மாக்களாம்
சிற்பிகளது கரங்கள்
துண்டிக்கப் பட்டனவாம் !!!
உலகில் இதுபோல் வேறெங்கும்
எழில் சிற்பம்
உருவாக்கப் படக்கூடாதென்று !!!
பி.தமிழ் முகில் நீலமேகம்
விழியும் மனதும்
மனதின் விழியும்
இமைக்கும் இடையே
இணைந்த தருணம் ...
இருட்டு விதியால்
இறைவன் சதியால்
கரணம் தப்பிய
காதலின் காவிய ஓவியம் !
மகித்ரா
காதலர்களின் அடையாளச் சின்னமாம்
ஆம்....
காதலால் மாயும் உலகில்
ஒவ்வொரு உள்ளத்திலும் தாஜ்மகால்
கட்டப்பட்டு அழிக்கப்படுகிறது....
காதலி ஒருத்தி
மனைவி ஒருத்தி என்று...........
துர்கா
நாமக்கல்
அழகிய அற்புத பளிங்கு
சமாதி..!!
காதல் கதையயும் கவிதையயும்
கண்ணிர் கோட்டும்
கருத்தாய் மனதில்
நிரப்பும் உண்மை இதயஙகள்
உறங்கும்
படுக்கை..!!
காதல் கண்ணீரும் கலந்த
காவிய மாளிகை..!!
யமுனைக் கரையில்
யதார்தம்..!!
தண்ணிரும்
இரத்தமும்
உண்டாக்கிய
உலக அதிசயம்..!!
கல்லரைக் காவியம்..!!
மனோ.மு
முகலாய மன்னனின்
மன எண்ணத்தில்
சிற்பிகளின் கை
வண்ணத்தில் ஆக்ராவில்
எழுந்ததுதுவாம் ஓர் காதல்
மகால்.... இல்லை
இல்லை தாஜ்மகால்.
உலக அதியங்கள் ஏழில் ஒன்றாம்
கண்டங்கள் பல தாண்டியே சென்று,
காதலில் வென்றவர்கள் பார்க்கத்..
துடிக்கும் கனவு மாளிகையாம்.
செடி கொடி அழகூட்டல் என
இன மத மொழி கடந்தோர்
கண்ணை மனங்களை
கொள்ளை அடிக்கும்
காதல் மகால்....அது தான் "தாஜ்மகால்"
ஆக்கம் யாயினி...
-------------
ஆடவனின் காமமாளிகை,
அழகிய அப்பாவிப் பெண்களின்
சமாதி
அப்பாவிகளின் கண்ணீரிலும்
செந்நீரிலுமான பாவக்கோட்டை.
சு கருணாநிதி
பிராண்ஸ்
காதலர்களின் அடையாளச் சின்னமாம்
ஆம்....
காதலால் மாயும் உலகில்
ஒவ்வொரு உள்ளத்திலும் தாஜ்மகால்
கட்டப்பட்டு அழிக்கப்படுகிறது....
காதலி ஒருத்தி
மனைவி ஒருத்தி என்று...
-பானு
தமிழ்நாடு
காதலுக்கு
நீ பெரிய பரிசு என நினைக்கிறாய்.
இல்லை!
ஒரு ஆணினதோ,
பெண்ணினதோ,
ஒத்த மனதைவிட வேறெது நல்பரிசு.
யோவான்,இலங்கை
கதை முடிந்த
காவியமான காதலுக்கு,
ஒரு சின்னம் .
தாஜ்மகால்.....
சு.பிரசாந், இலங்கை
காதல் நல்லது - இல்லையில்லை!
புனிதமானது தெய்வீகமானது
ஆகாவோகோ அப்படியிப்படியென
விளாசுகிறார்கள் வீரயிளைஞர்கள்.
‘நல்லதுக்கே காலமில்லை’
கிளிப்பிள்ளையாய் சொன்னவாறு.
உயிர்வரை உயர்ந்தவற்றை
வருடக்கணக்கில் ஒன்றாக்கி
உருக்கிவார்த்து வடித்தெடுத்த
மனிதவுழைப்பின் மொத்தவிடை.
காதல் நினைவு மாளிகையோ
கண்களை கொன்றிடும் கல்லறையோ
ஆண்ட ராணியின் அதிகாரமோ
அரசி விரும்பிய ஆபரணமோ
அன்றி
அரசை சிறைக்கனுப்பிய ஆடம்பரமோ?
அறிவுக்கு அழகுக்கு
திறனுக்கு திடனுக்கு
சவாலான சிறப்புகளின்
சிகரமின்னும் செயற்கட்டிடம்.
காதல் சின்னமாம்
போற்றி புகழ்கிறார்கள்
பொதுவாக படித்தவர்கள்.
காதல்.
குற்ற மனதோடு தோற்ற மனதோடு
எப்படியோ! ஒன்றாகிவிட்டோம்
என்வாழ்க்கை என்முடிவு
தம்செயல், பிள்ளைகள் செய்தல் குற்றம்
என
அழகுக்காக அவசியத்துக்காக
புகழுக்காக பொருளுக்காக
தற்காலத்திற்காக பிற்காலத்திற்காக…
வகைவகையான காதல்கள்
இம்மண்ணில்.
இந்த இதற்கேயிங்கு
ஓடுவது ஒளிவது
அடிப்பது ஒடிப்பது
எரிப்பது முறிப்பது
வெல்லுவது கொல்லுவது
வானத்தை இரண்டாக வெட்டுவது
உலகத்தை உள்ளீடற்றதாய்
வெளியேற்றி கட்டுவது
எல் லாம்.
இதோ :
நாமிருவர் ஆண் பெண்.
வா
காண்பதனைத்தும் நமது
நம் போன்றோரின் உடமை
ஆக்காமல் அழிக்காமல்
தோண்டாமல் குவிக்காமல்
வெட்டாமல் ஒட்டாமல்
வேண்டியதை உண்டு வளர்த்து
வேண்டாததை தவிர்த்து வளர்க்காமல்
ஒளிவு மறைவு பதுக்கல் பதுங்களின்றி
உனக்கு நானும் எனக்கு நீயும்
நமக்கு பொதுவும் பொதுவுக்கு நாமுமென
உண்மையாய் ஒழுக்கமாய்
இன்பமாய் இரக்கமாய்
நீதியாய் நேர்மையாய்
இருக்கும் வரை இயன்ற வரை
மனிதமுள்ள சந்ததிகளை தந்து
மனிதமாய் வாழ்ந்து மறைவோம்.
இரு அன்புகளின் இதய ஒப்பந்தமாய்
அன்பை பெற்றெடுத்து உலகை காப்பதே
காதல்.
உரக்க சொல்வோம்
காதல்
உலகை நேசிக்க கற்பித்து
அதற்காய் வாழச்செய்து
நம்மை
நிறைமனதாய் மறையவைக்கும்
புகழ் வாழ்வின் புனித சின்னம்
என்று.
அந்த சின்னத்திற்கே சின்னமாய்
கோபுரம் கோவில் எழுப்புவது
கற்சிலை கடவுளாய் ஆக்குவது
எதுவுமீடாகாது ஒன்றை தவிர
ஆம்
மனிதத்தின் சின்னம் காதல்
காதலின் சின்னம்
புனித மனிதமென்று சொல்லும்படியாகிவிட்ட
சராசரி மனிதம்
அனைவர்க்கும் ஆதிவாசிகளாய் வாழ
அவ்வளவு ஆசை - கட்டுபாடுகளற்ற இன்பங்களோடு
ஏனிருக்காது?
இங்கு ஏதேனுக்கு பட்டா போடுவதே குற்றம்.
நாமோ
பரம்பொருளுக்கே திட்டம் போடுகிறோம்!
ஆராய்ச்சி பெயரில்
பத்திரப்பதிவு ராக்கெட்டுகளோடு.
அந்த காதல் மாளிகை
காதலுக்கான கல்லறையோ
காதலின் கல்லறையோ?
ஷாஜகான் கட்டியது மட்டுமல்ல?
கற்பகாலத்திற்கே கூடென
ஆகாய சுத்தி காகம் வரை
புட்டு புட்டு பாடம் நடத்தியும்!
நூறிடத்தில் ஒன்று ஓரிடத்தில் நூறென
உறங்க விளையாட
ஓய்வெடுக்க பூட்டிவைக்க
கண்காது மூக்குநாக்கென எதெதற்கோ!
விருந்தாக மருந்தாக அதுவாக இதுவாக
ஏதேதோ அதிவசதியாய்
இருப்பவர் முதல் இரப்பவர்வரை
நாம் கட்டிவைத்துள்ள அனைத்தும்
மனித மாளிகைகளே.
இதே வேகம் போனால்?
இப் பூலோகம்
சோறாகி குழம்பாகி கறியாகி கூட்டாகி
‘பூமி மகால்’ என
வேற்றுலகார் கூறுவரோ என்னவோ?
ஆனாலும் ஆகலாம்
அப்படியே ஆனாலும்
பூமி பந்தினொரு மூலையில் அங்கோர் சோலையில்
உண்மை காதலின் அரிய சந்ததி
பிறந்தே இருப்பார்கள் - மனித மிச்சமாய்.
‘நன்மைதீமை அறியும் கனி’ பரிட்சையில் வென்ற
இருவராய்
காதலராய்.
நிச்சயம்
விண்வெளி உடைகளோடல்ல
விண்ணக உடைகளோடு
சாத்தான் பாம்பினால் பாவத்திற்குள்ளாக்க முடியாதபடி
காதலுடன்!
இயற்கை இறைவன் பரிசளித்த பூவான பூவுலகுடன்
புதிய பூமியில் ‘புனிதமனிதம்’ எனும் காதல் சின்னத்துடன்.
கோடிகோடியாண்டு அகிலத்தின் ஆயுளை
ஆயிரமாயிரமாய் அறிவியல்களால் சாதித்தவர்கள்!
காற்று நீருள்ள வாழ்விடத்திற்காய்
உலகை செலவழித்து வேற்றுகிரகத்தில்.
மீண்டும் எதிர்காலத்திற்கு
எரியெண்ணை உலோகங்கள் தேடியபடி,
வருடங்கள் கொத்து கொத்தாய் கடக்க
வீடுகளில் காடுகளை வளர்த்தபடி
மேலும்
காடுகளை வீடுகளாக கட்டிக்கொண்டு
அதற்கேற்ப வாழ்ந்தபடி.
இருந்ததை இழந்து கடந்ததை மறந்து
மீண்டும்
மண்காலம் கற்காலம் பொற்காலம்
ஆதாம் ஏவாள் கதைகள்
பயத்தை பூட்ட பரமன்கள்
அன்பை மாட்ட சிலுவைகள்
ம்…
அதிலும்
நம் மாணரசர்களின் பேராசை வேகம்!
வரலாறு திருப்பப்பட்டு
கட்டப்படும் என்றே தோன்றுகிறது?
மரணத்தோடு ஆளப்போகும் அரசர்களாய்
உயிரை மறந்து திட்டமிடப்போகும் மந்திரிகளாய்
கொலையரங்கில் விலைபடப் போகும் வீரர்களாய்
புதிய புதிய புத்தியோடு கத்திகளை
பயத்தோடு தீட்டப்போகும் படிப்பாளிகளாய்
வியர்வையாற்றில் தத்தளித்தபடி உழைக்கும் தொழிளாளர்களாய்
அப்படியே…
இயற்கை வலிகள் இல்லாததினால்
தாடிக்கும் மீசைக்கும் பின்னல்கள் கொண்டைகளென
செயற்கை வலிகளுக்கெதிரான
செய்கைகள் குற்றங்கள்
சமத்துவ போர்களென
ஒப்பனை பொய்களுக்காய்
தங்களோடு அனைத்தையும்
ஒளியின் வேகத்தில் பலியிடப்போகும்
ஆணினத்தை காத்தபடி,
இரத்தத்தின் இரத்தமாய் உயிரின் உயிராய்
இருந்ததை வெறுத்த பாசத்தை பழித்த,
ஆட்சியதிகாரத்தை நம்பி அமைதியை
ஏன்
அனைவரின் இன்பங்களையும் கைவிட்ட
எதிர்கால பெண்மக்களால்
காதலால்
‘ஷாஜ்மகால்.’
தீமையை நம்பியோர் தீமையோடு அழிந்துகொண்டிருந்தாலும்
அப்போதும்
எப்போதும்போல் மனிதத்தை காப்பதில்
அன்பு - படைத்தவராக
காதல் - பெற்றவராக
காதலின் சின்னம் –
தன்னைப்போல் பிறனை - உலகை
ஏன் அனைத்தையும் நேசிக்கும்,
பொதுமுழுக்க உடமையாயிருந்தும்
உடைகளற்றவர்களாய்
மறைவு ஒளிவு இல்லாதிருந்தும்
மோகமற்றவர்களாய்
பழங்களை உண்டு பறவைகளோடு பேசி
மீன்களோடு நீந்தி விலங்குகளோடு விளையாடி
வீடு காடு நாடு அரசு மதம் மொழி சட்டம் சமூகம்
நமைபோல் எதிலும் எவ்வித மதமும் பிடிக்காத
எளிமையிலும் எளிய
அன்பு நிறைந்த
ஆதாம் ஏவாள் அவர்களின்
கடவுளுக்கு கீழ்படிந்த ஆதி மனிதமாக.
குறைந்த பட்சம்
அதை நோக்கிய எண்ணங்களோடு
அனைத்தையும் அமைத்தபடி
மரிக்கும் வரையாவது
ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய்
உண்மையுடன் ஆராதித்துக்கொள்ளும்
ஆணும் பெண்ணுமாக.
உயிர்களாலான உலகமகாலில்.
ந.அன்புமொழி, சென்னை.