apple
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-12-31 00:00

ஆறடி நிலவே
.............

ஆறடி நிலவே - என்
அருகில் வந்ததே
காலடி மணலில் - பல
கவிதை தந்ததே
வீசிய பார்வையின்
விரல் படவே - என்
விரதம் உடைகிறதே
பேசிய மௌனம்
உயிர் தொடவே - புது
இதயம் முளைக்கிறதே

தரைமீது என் கால்தடம் படவில்லை
காற்றில் ஏறியே நடக்கின்றேன்
விரல் மீது என் கவிதைகள் தொடவில்லை
விண்ணின் இமையினால் எழுதுகிறேன்
ஒலியின் ஓசைகள்
என் இதயம் துளைக்கிறதே
நகரும் சருகுகள்
என் இடத்தை பார்க்குறதே

கடல் மீது தலைசாய்த்து உறங்குகின்றேன்
விழியலையாலே அணைப்பாயோ
மழை மீது உயிர்தோய்த்து நனைகின்றேன்
முகில் இறகாலே துடைப்பாயோ
மின்னல் கயிறுகள்
எனைக்கட்டி இறுக்கிறதே
கண்ணின் கதவுகள்
உனைவைத்து அடிக்கிறதே

-உடுவையூர் த.தர்ஷன்

- , 2012-12-31
பாளம் பாளமாய்
வெட்டப்பட்ட பின்னால்
சேர்ந்த்திருத்தலில்
என்ன பயன்?

உயிர் இழந்த
பழமே
இன்னும் எதற்க்கு
உன் தலையில் இலை ?

-சுரேசுகுமாரன்

- சுரேசுகுமாரன், 2012-12-31
கூறுபோட்டு பாகம் பிரித்தீரோ ??
அன்றி - அலங்காரத்திற்காய்
அறுத்து அடுக்கினீறோ ??
எதுவாயினும் - அதன்
பலன் மறந்து - பாழாக்காமல்
இருத்தல் நலம் !!!

-பி.தமிழ்முகில்

- பி.தமிழ்முகில், 2013-01-01
இயற்கையில்...

இயற்கையில் அழகுதான் மரத்தில்
காயும் கனியும்..

அதைப் பறித்து
அறுத்துக் கூறாக்குவது
மனிதனின் இயற்கை..

எடுத்து அதைச் சேர்த்து
எப்படி வைத்தாலும் வருவதில்லை
இயற்கை அழகு..

இயற்கையை அழிப்பதுதான் மனிதனின்
இயற்கை குணமோ...!

-செண்பக ஜெகதீசன்...

- செண்பக ஜெகதீசன், 2013-01-01
புருவம்

கருப்பை வளைத்துபோட்டு
கண்மேல் வளைத்துபோட்டு அதில்
என்னையும் வளைத்துபோட்டுக் கொண்டது
உன்னுடைய புருவம் .......

விக்கி,இந்தியா

- விக்கி, 2013-01-01
துடிப்பு

ஓரம் சுருங்கினாலும்
பாவாடையின் ஒரு பகுதி
சொருகப்பட்டே இருக்கும்.

உடற் சிதைய
வாயிலிருந்து நீர்
ஒழுகிக்கொண்டே இருக்கிறது.

புதிய புடவை
எடுப்பாகத்தான் இருக்கிறது.
விரும்பி வாங்கியதாக
அமுலு அழுதாள்.

உலுத்ததால் சார்த்தப்பட்ட
மரமென நிற்கிறான் அண்ணன்.

கதிரை மேய்ந்ததற்காக
வெகு தூரம் ஓட்டிச் சென்றாலே
கழனிக்காரனுக்குச்
சாபம் கொடுக்கிறவள்
என்ன நினைத்தாயோ

இனி பட்டியிலிருந்து
ஒவ்வொரு ஆடும்
அறுபட்டுவிடும்.

வேண்டாம் என்றாலும்
பிற்பகலில் பரபரக்கும்
பெண்களைக் கண்டதும்
வந்துவிட்டது புரிந்தது.

குழப்பமாக இருக்கிறது
இவர்கள் எப்படி இங்கு!

தம்பியின் சுற்றமோ!
அவன் முந்திக் கொண்டால் என்ன
உன் சாதி தானே
எல்லோரும்
ஒத்துப் போனபிறகு ஏனோ!..

ஏரிக்கரையில்
சுழன்றுவரும் காற்றுக்கே
தெய்வங்களைக் கூப்பிடுபவள்

இயக்கம் நின்ற
நிறுத்திய உடலங்களுடன்
எப்படி இருந்தாய் ஒன்றரை நாள்.

இவ்வளவு நேரம் இவள்
உள்ளேதான் இருந்தாளோ
குழந்தை
பிறந்ததும் இறந்துவிட்டதாமே?
கட்டிக் கொண்டவன் மொறைக்கிறான்
சும்மா பார்த்துக் கொண்டிருக்கட்டும்
ஊராரின் சலுகையில்
உட்கார்ந்து கொண்டாள் அருகே

எல்லோரையும்
பார்த்துவிட்டுத்தான் வந்தாயாமே?

பக்கவாதத்தால்
முடங்கிவிட்ட அப்பா உன்னையே
பார்த்துக் கொண்டிருக்கிறார்
அது அலமரல்.

பஞ்சாயத்தில்
சண்டை போட்டாயாம்
அவமானமாக நினைத்தாயா?

உன்னை அறிந்தவள் நான்
வெறிப்பதில்
நெஞ்சு வலிக்கிறது.

எல்லோருடைய பார்வையும்
தம்பிமீது தான்
உன்னை விலக்காதபடியே
நடக்கிறான் பார்.

நீ உழைத்துப் போட்டதற்கு
ஊராரைச் சாட்சியமாக்கி
ஒப்பாரி வைக்கிறாள் அம்மா.

உனக்கு எப்படியோ
எனக்குப் பிடிக்கவேயில்லை.

இது என்ன
அவசர அவசரமாய்
அலங்காரமோ?

வந்தார் வருவார்
யாரையும் பார்க்கவில்லை
எண்ணெய் தேய்த்து, நீர் தெளித்து
பொட்டு,பூ வைத்தாயிற்று
துணையாம்
கோழியும் வந்துவிட்டது.

பரவாயில்லை
முன்னேமாதிரி இல்லை
ஒருவேளை
எருக்கம் கிடைக்கலையோ

உன் வெட்கம்
எங்கு போனது?
தலையிலிருந்து கால் முடிய
இறுகக் கட்டியிருக்கிறார்கள்.

புடவை கட்டியதில்லை
இன்றுதான் பார்க்கிறேன்
போர்த்திய நிலையில் .

எல்லோரும்
குழுமியிட்ட ஓலத்தில்
தம்பியின் அழுகை
தனியாகக் கேட்கிறதடி

முடிந்து விட்டது.
நடக்கையில் கேட்கிறது
நீ போவது.

விளங்கவில்லை!

இயக்கத்தை
நிறுத்தத் துணிந்த நீ
இயங்க
முயற்சிக்கவில்லையே?

முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்

- ப. குணசுந்தரி தர்மலிங்கம், 2013-01-01
காதலின் மௌனம்

காதலின் வலியில் சிக்கிய மானும் அன்பின் மடியில் சிக்கிய நானும் காதல் ஒரு தனிமை யுத்தம் ! அந்த யுத்தத்தில் வெற்றி பெற்றால் தான் காதலின் வாசலை தொடமுடியும்

காதல் போராட்டத்தின் வெற்றி! அன்போடு காதலித்துப்பார் காதலில் வெற்றி பெருவாய்

காதலில் மனம் நொந்தவர்கள் சிலர் மரணத்தை தேடி அலைகிரார்கள்

அந்த காதல் வெற்றி பெற்றால் மரணம் பயம் மரணம் என்றால் என்ன என்று அப்பதான் தெரியும்

காதலர்கள் அனுபவிக்கும் அன்பு என்ற அந்த சுகத்தில்தான்

இமையத்தைத்தாண்டி
நிற்கும் காதல் என் காதல்

-பு.மனோரஞ்சன்
உளூந்தூர்பேட்டை,தமிழ்நாடு,இந்தியா

- , 2013-01-01
மனதில் ஆயிரம் கனவுகள்..!!
வறுமை ஒழிந்து
செல்வனாய் வாழக் கனவு..!!
அம்மாவிற்கு ஆயிரம் புடவை
புதிதாய் அளிக்க கனவு..!!
ஈரடுக்கு மாளிகையிலே
தந்தை அமர்ந்துணவுண்ன
காணக்கனவு..!!
தமக்கையின் கையில்
வையிரம் மின்ன நான் காண கனவு..!!
கவிஞ்கனாய் நானும்
திரைப் பாடலில்
மினுமினுக்க கனவு..!!
கனவுகள் நினைவானதாக
நித்தமும் கனவு..!!

மனோ.மு

- மனோ.மு, 2013-05-06
எழுதுங்கள் உங்கள் வரிகளை...
-----------------------------

காய் போன்ற கனியினை
கனிவோடு பறித்து
அளவோடு வெட்டி
அழகோடு அடுக்கி
குடியேற்ற வீடுகள்
வரிசை வரிசையாய்
கண்கொள்ளா காட்சியாய்
வரிகள்
நாம் வசிக்க வேண்டுமே.

அதற்கு இதற்கென்று
வரிக்கு வரியென
எதெதற்கோ
வரி.
எல்லைக்குள்ளான நாடுகள்
அவை வசூலிக்கும்
வகைவகையான
வரிகள்.
ஆட்சி சிறக்க வேண்டுமே!
அனைத்தும்
விலையுள்ள வரிகள்.

மனிதம் மகிழ்ந்து நலமாய் வாழ
நல்வரிகள் தேடும்
வரிசையோர்க்கு
ஓநாய்களுக்கேயானாலும்,
தரச்சொன்ன எதையும்
இயேசுவி னாடுகளே
இலவசமாய் தராமல்
விலைவைத்து
மேலுமதற்கு
வரிவசூலும் செய்யும் போது
வேறுவழியின்றி வரிகளை கேட்கிறது,
அற்புதம்
அதிசயம்
அனுபவம்
அறிதல்
புரிதல்
உணர்தல்
அனைத்தும் ஒரே வார்த்தையில்
‘கவிதை’
அதற்கான
அவசியமான
பரலோகமே பொறாமை படும்படியான
புதுவுலகை படைப்பதற்கான
உங்கள் வரிகள்.
கட்டலாமே?
ஏழைகள் நாங்களே
எழுத்து கூட்டி எழுதும்போது
நீங்களும்!
வார்ப்புடையதை வார்ப்புக்கு.

--------------------------
அன்புடன்
ந.அன்புமொழி
சென்னை.

- ந.அன்புமொழி, 2013-06-13
கற்பனை
--------------

கதவு திறக்கும் சத்தம்
கண்கள் தேவை இல்லை
இதயம் அறியும்
இரு பாதங்களின் தூரத்தினை

மாவீஆ

- மாவீஆ, 2013-06-13
காதலின் கனவு

இருட்டில் ஒரு சிறு வெளிச்சம்
சிறு வெளிச்சத்தில் மின்னும் அழகு
அவ்வழகை பார்க்கைில்
இருட்டு மறைகிறது
சிறு வெளிச்சம் மட்டுமே முழுமை அடைகிறது

பீர் முகம்மது
தமிழ்நாடு

- பீர் முகம்மது, 2013-06-20
அன்பான காதல்

அழகான பெண்ணை அன்பாக
பார்ப்பது காதல் இல்லை
அன்பான பெண்ணை அழகாக
பார்ப்பது தான் காதல்

பீர் முகம்மது

- பீர் முகம்மது, 2013-09-06
பெரும் இருள் கனவுகள் பூராயும் ஆக்கிரமித்து
இப்போது நீ கதலைச் சொன்ன வார்த்தைகள்
பக்கம் மெல்ல நகர்ந்து கொள்கிறது

அதன் ரணங்கள் கண்வளியூடாய்ப் பிரவாகிக்க முன்வருகிறது
நீ காதலைச் சொன்னதைப்போன்று

நண்பர்கள் மனமறிய முனனம்
அதைத்திருடி வாய்க்குள் திணிக்கிறேன்

நீ நடந்த மண்ணை வீழ்ந்து முத்தமிடுகிறேன்
அவறறை சேமிக்காமல் வீசிவிட்டேன்
பின்புதானுணர்ந்தேன்
அதை இதயம் பெற்றுவிட்டுத்தான்
எறிந்து கொள்வதற்கு
இடமளித்திருக்கிறதென்று.

பார்ததி மொளனஞானி

- பார்ததி மொளனஞானி, 2013-09-06
புதியதோர் உலகம்
புறக்கணிக்காத உள்ளம்
புத்தியை புதிதாக்கும் சூழல்
சலவை செய்த கைகள்
சாவுக்கு அஞ்சிடாத கண்கள்
சத்தியத்திற்கு அலையும் கால்கள்
தெவிட்டாத இன்பம்

இப்படி எத்தனையோ கற்பனைகள்
ஏற்றி வாழ்ந்திருப்பாய்
அனைத்தும் அரங்கேறியதா
அரங்கேறினாலும்
அரங்கேற்றம் அரைநொடியில்
அணைந்திருக்குமே ?

எங்கெல்லாம் செல்கிறாயோ
அங்கெல்லாம் சிக்கல்களின்
சிதைந்த சங்கீதம் இசைந்துகொண்டே
இருக்கும் !!!!

உன்னை புதுபித்துகொள்ள முற்பட்டால்
புதுப்பித்தலில் நீ காணமல் போவாய்
புதுப்பித்தல் என்ற பெயரில்
எத்தனை முறை நீ
வாழ்கையை இழப்பாய் !!!!
இழந்துகொண்டே இருந்தால்
எப்போது இன்பத்தை அனுபவிப்பாய்!!!

ஏற்றுகொள்வதில் சில சிக்கல்
இருந்தாலும்
ஏற்காமல் சிக்கலை சந்திக்கவே
முடியாது !!!!

ஆகவே

எழுந்திரு
எதிர்த்து நின்றால்
உடைவது உறுதி
சிரித்துகொண்டே
வாழ்கையில்
போராட கற்றுகொள்!!!!

வாழ்கையின் ஓட்டத்தில்
எதிர்நீச்சலிடுவதை விட
ஓட்டத்திற்கு தகுந்தார்
போல நம்மை
தக்கவைத்துகொள்வதே
புத்திசாலித்தனம்

எப்போதெல்லாம் உன்னை
தக்கவைத்துகொள்கிறாயோ
அப்போதெல்லாம் வாழ்கையின்
இன்பத்தேன் உன்னால்
சுவைக்கபட்டுகொண்டே இருக்கும் !!!!

-கார்த்திக்பாரதி

- கார்த்திக்பாரதி, 2013-11-26
உன் திரும்ப மறுக்கும்
கண்ணசைவுக்குள் வாழ்கிறது.
என் முதலான உயிர்.

அதை மீண்டும் பழகாமலிருக்க
கற்றுக் கொள்கிறேன் .வாழ்தல்
சலித்துப்போகாமலிருப்பதற்கு..

-மௌனஞானி பார்த்தீபன்

- மௌனஞானி பார்த்தீபன், 2013-11-26
ஆவலாய் எழுதி
ஆனந்தமாய் படித்து
ஆசையாய் அனுப்பியதை
ஆர்வமாய் ரசிக்க இயலாததென
ஆக்ரோஷமாய் திருப்பி அனுப்பியதும்
ஆழமாய் கீறிய நெஞ்சின்
ஆதங்கமாய் கொட்டி வேறொரு படைப்பு
ஆக்கமாய் ஆக்கினேன் எனையே....!!

--
காயப்பட்ட இதயக்கனி
வீழ்ந்திடாமல்
ஆற்றாமைக் கண்ணீர்இலை
தாங்கிப் பிடித்திடுமே...

முயற்சித் தோல்விக்கனி
சாய்ந்திடாமல்
தன்னம்பிக்கைத் தளிர்இலை
ஏந்தி நிறுத்திடுமே...

நேர்மை பண்புக்கனி
வெட்டுப்படாமல்
உண்மை உழைப்புஇலை
சூழ்ந்து உயர்த்திடுமே....

- நாகினி
துபாய்(UAE)

- நாகினி, 2013-11-26
ஆதியில் முளைத்த சாதியில் ,
பாதி சதி மீதி விதி
விதை போட்டவன் விருந்தாளி - அதில்
சதை போட்டவன் சாமர்த்தியசாலி

-ஓபிலீ, ஆண்டிபட்டி ,தேனீ,தமிழ் நாடு

- ஓபிலீ, 2013-12-02
முகவரி தேடும் மலையகம்!

முகவரி என்பதன்
முதலெழுத்து எங்கே
முகவரி தரப்போகும்
முதல்வனும் எங்கே?

ஆண்டாண்டு காலங்கள்
ஆட்சியினைப் புரிந்தார்கள்
தொழிலாளியான எம்மை
தொலைதூரம் எறிந்தார்கள்?

பச்சையணி தேயிலை மலையில்
இச்சையோடு துரையிருப்பான்
கொழுந்தை பெண்கள் பறித்தாலும்
கொடும்பேச்சால் துளைத்தெடுப்பான்!

எம் பாட்டில் நாமிருந்தோம்
துணையின்றி வாழ்ந்திருந்தோம்
அவர் பாட்டுக்கு ஆடச் சொன்னார்கள்
அவர் மெட்டுக்கு பாடச் சொன்னார்கள்
ஆட்டங்கள் ஓயவில்லை - இன்னும்
எமக்கு ஓய்வும் இல்லை!

சிங்கமாய் கர்ஜித்தோம்
சிற்றெரும்பாய் ஆக்கிவிட்டார்கள்
சிட்டுக்களாய் சிறகசைத்தோம்
சிறகிரண்டை உடைத்துப் போட்டார்கள்!

ஒரு கையில் பொட்டலமும்
தலையிலொரு கூடையுமாய்
மறு வேலை உணவுக்காய்
மலைக்கு நாம் புறப்படுவோம்!

கைகட்டி வாய்பொத்தி
கைதியாய் இருக்கின்றோம்
கணக்குப் பிள்ளையின் முன்
கடுகாக சிறுக்கின்றோம்!

கவலைகள் மறப்பதற்கு
கசிப்பொன்றும் மருந்தில்லை
ஆனாலும் அதைவிட்டால்
எம்மவர்க்கு வழியில்லை!

பொருளாதாரச் சுமை
பொறுமையை சோதிக்குது
பணங்காசு குறைஞ்சதால
படிப்பை அது பாதிக்குது!

நெருப்பட்டி குடில்களில்
நெரிசல்கள் தினம் நிகழும்
நித்தம் எம் துயர்கண்டே
நிலவோடு இரவு அழுவும்!

மழைச் சாரல் அடித்தாலும்
வெயில் கொளுத்தி எரித்தாலும்
வாழ்விலொரு மாற்றமில்லை
வழிதெரிய ஏற்றமில்லை!

மலையக மைந்தர்களே
மனசில் இதைப் பதித்திடுங்கள்
இனியாவது நாம் மிளிர
இனிய விதி படைத்திடுங்கள்!

முகவரி என்பதன்
முதலெழுத்து ஆகிடுங்கள்
முகவரி தந்திடும்
முதல்வனாய் மாறிடுங்கள்!!!

வெலிகம ரிம்ஸா முஹம்மத் (இலங்கை)

- வெலிகம ரிம்ஸா முஹம்மத் , 2013-12-02
வாழ்க்கை

அன்னை ஆலையில் தோன்றி தென்னை ஓலையில் முடிவதுதான் வாழ்க்கை.

ஓபிலீ,ஒக்கரைபட்டி,ஆண்டிப்பட்டி,தேனீ .

- ஓபிலீ, தேனீ, 2013-12-26
காதல் துடிப்பு

கடினமான இரும்பே மென்மையான பெயிண்ட் படாமல் இருந்தால் எப்படி துருப்பிடித்து போகுமோ
அதேபோல் நீ என்னை விட்டு விலகி இருந்தால் நான் உடைந்து விடுவேன்.

பீர் முகம்மது, தமிழ்நாடு

- பீர் முகம்மது, 2013-12-26
துபாய், துணைவன் துரைச்சாமி.

கனவாய், வந்தாய் கணவா !
நினைவால், நின்றேன் சிலையாய்
தனலாய், கொதிக்கும் கதியில்
என்னை, தவிக்கவிடுவது சதியே !
பங்குனிமாத, தங்கவந்த கனியே !
என்னைபங்கு, கொள்ளும் மணியே !
தங்கமும், தந்தாய் கனிவாய் !
ஏங்கவும், செய்தாய் பனிவாய் !
வீரமுள்ள, என்னவரே
வீறுகொண்டு எழுந்திருந்தாய்
விசாமுடியும், காரணத்தால்
விரைந்து, விட்டாய் என்னைவிட்டு
தேசம்விட்டு, சென்ற கணவா !
என்தேகத்தை, என்றும் மறவா !
பணமா வாழ்க்கை பதியே
வாட்டுது என்னை விதியே
உயிராய், நினைப்பேன் உனையே
உழைத்தது, போதும் துணையே
திரும்பிவிடு, திணைக்கரும்பே !
திகட்டவில்லை, உன்குறும்பே !
என்னருகே, நீ இழைந்து
குடித்த, கூழும் குளிர்ந்ததய்யா !
பிரிந்திருந்து, நீ உழைத்ததினால்
பிரியாணியும், பித்தமய்யா !
குடிசையிலே, குதூகளித்தோம்
மார்கழியில், நான் மாசமய்யா !
ஏசி வீட்டினிலும், குடியிருக்கோம்
எல்லா, மாசமும் தோஷமய்யா !
வந்துவிடு, வசந்தகாற்றே நாம்
வளமுடனே, வாழ்ந்திடவே
போய்விடுவோம், குடிசைக்கே
குதூகளிப்போம், குடும்பத்துடன்.....
குலவிளக்கை, ஏற்றிடவே
வம்சவிளக்கை, வளர்த்திடவே
மனவிலக்கை, உடைத்துவிடு
மலர்க்கனையை, விதைத்துவிடு
என்விழியை, உனக்காக நீ வரும்
வழியில், நிறுத்தி வைத்து
கடைசிவரை, காத்திருக்கும்
கடையநல்லூர், காஞ்சனா.

சாம்பசிவம்-

- சாம்பசிவம், 2014-03-23
இதயத்தை உடைத்தவளே
என் மனம் உன்னை தேடுகிறது
நீ என் இதயத்தை உடைத்தாயே
உயிர் கொடு
இந்த ஜீவனுக்கு
மீண்டும் உறவாட

-மனோரஞ்சன்,தமிழ்நாடு

- மனோரஞ்சன், 2014-03-23
அவளிடம்...

பூவை கொடுத்து
புன்னகை வாங்கினேன்

பொருளை கொடுத்துதான்
பாசம் வாங்கினேன்

செல்போன் கொடுத்துதான்
நட்பை வாங்கினேன்

சேலை கொடுத்துதான் பேச
சம்மதம் வாங்கினேன்

பூவை கொடுத்த நான் இறுதியில் - என்
சாவை கொடுத்துதான் காதல் வாங்கினேன்.

-ஓபிலீ

- ஓபிலீ, 2014-03-23
நிலா

நான் பூவா தலையா போட்டபோது
பூமி வந்து சேரா புது நாணயம்,
நான் வானவில் கொடியில் உதறி போட்ட
துணிகளில் தவறிப்போன கைக்குட்டை.

நிலா ......நிலா .......நிலா ......நிலா

---------
ஆசை

வெட்ட வெட்ட வளரும் ஒரு
வேரில்லா மரம்

---------

ஓபிலீ,ஒக்கரைபட்டி,ஆண்டிப்பட்டி,தேனீ

- ஓபிலீ, 2014-03-23
கீதாஞ்சலி

பூத்திருந்த பூந்தளிரே...
காத்திருந்தாய் கனியதற்கு,
தேன் கொட்டும்நேரத்திலே...
தேள் கொட்டிவிட்டதென,
தேர் ஏறிபோனவளே...
ஊர் தேடிவந்துவிட்டாய்,
கொஞ்சுகின்றாய்...கொஞ்சுகின்றாய்...
துயில் கொள்ளும் எனைக்கண்டு
அஞ்சுகின்றேன்...அஞ்சுகின்றேன்...
அஞ்சுகமே உனைக்கண்டு
தறிகெட்டு ஓடினாலும்-கழுத்து
நெறிபட்டு விடுவேனோ
விழி பிதுங்கி விடும் முன்னே...
வழி தேடி வாரேன் பின்னே...

தற்காலம் ஈருடலாயினும் பிற்காலம் ஓருடலாவோமென கருதியிருந்த கன்னியின் மரணத்தால் வேருடல் வடித்த சிவப்புகண்ணீரஞ்சலி....

-Killergee,Abu Dhabi

- Killergee, 2014-03-28
நட்பு...
காரணம் சொல்லி பிரிய காதலும் இல்லை...
காரணம் இல்லாமல் கலைய கனவும் இல்லை....
கண்ணுக்கு தெரியாத கடவுளும் இல்லை....
அகம் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் சொந்தமும் இல்லை....
வீழும் போதெல்லாம் தோலும் ...
அழும் போதெல்லாம் ஆறுதலும் ....
தனிமையில் நம்பிக்கையும் தரும் ..
உயிரிலும் மேலான உன்னதமான உறவு நட்பு.....

-குணா,இந்தியா

- குணா, 2015-08-08
தட்டு தட்டு எல்லாம் தட்டு
நாம் வாழ்வதே ஒரு சொட்டு
மனதில் உள்ள கரைகளை கொட்டு
நம்மால் முடியும் செய்து காட்டு

சுயநலம் பிடித்த உலகு இது
சும்மா இருந்தா போதாது
நால்லா இருந்தா
யாருக்கும் பிடிக்காது
எல்லாம் நல்லா மாறும் போது
மனிதர் மட்டும்...

சொல்ல எந்தநாளும் வெல்ல
கள்ளி முள்ளும் குத்தும்
சமூகம் காது கிளிய கத்தும்
கிள்ளி எறிந்துவிட்டு
அள்ளிக் கொள்வோம்
வலியை மறந்து
வானம் தொடுவோம்.

அ.தேகதாஸ்

- அ.தேகதாஸ், 2015-12-28
கலந்து இருக்கிறது

கலந்து இருக்கிறது அந்த நிலவில் உன் முகம் !
கலந்து இருக்கிறது
அந்த தென்றலில் இந்த மேகத்தில் இந்த காற்றில்
உன் சுவாசம் !!
கலந்து இருக்கிறது அந்த குயிலில்
இந்த மழையில்
இந்த இசையில்
இந்த ராகத்தில்
உன் குறல் !!!

உன்னை ஒரே நொடியில்

என் கண்களுக்கு மட்டுமே தெரியும் !
நீ ஆயிரம் பேருடன்
நடந்து வந்தாலும்
உன்னை
ஒரே நொடியில் கண்டு பிடிக்க !!

ஆயிரம் கவிதை எழுதியுள்ளேன்

நான் உன்னை பற்றியே
ஆயிரம் கவிதை எழுதியுள்ளேன் !
இதல் அனைத்துமே
உன் கண்களையே
மறைமுகமாய் வைத்து எழுதியது என்று !!
மீண்டும் படிக்கும் போது தான் தெரிகிறது !!!

முத்தம் முத்தங்கள்
காத்து இருக்கிறேன் நிழலில் !
நடந்து வருகிறாய் வெயிலில் !!
இதோ உன் கால்களுக்கு என் முத்தங்களை
சமர்பிக்கிறேன் !!!

கவலை படாதே
உன்னிடம் நான் பேச
வில்லை என்று
நீ கவலை படாதே !!
பேசிக்கொண்டே
இருக்கிறேன் என் இதயத்தின் மூலமாக !!!

என் தேவதை
காத்து இருக்கிறேன் உன் வருகைக்காக நீ என்னவே என்னை கண்டு பதுங்கிக்கொள்கிறாய்
என் மனமோ நீ இங்க தான் இருக்கிறாய்
என்று செல்கிறது
என் இதயமும் படபடக்க தொடங்கியது
திடீர் என்று காட்சி அளிக்கிறாய் தேவதையாக

நினைக்க மறக்காதே
நீ உறங்கும் முன் நினைக்க
மறக்காதே !!
வந்து விடுவேன்
உன் கனவில் என்
உறக்கத்தையும்
விட்டு விட்டு !!!

இதற்கு தானா
இதற்கு தானா
சிறை பிடிக்க பட்டேன்
என்னை மட்டுமே ரசிக்கும் கண்கள்
என்னை பத்தியே பேசும் உதடு
ஒரு இடத்தில் நிற்காத
கால்கள்
விட்டு விட்டு
துடிக்கும் உன் இதயம்
இதற்கு தானா

-மனோரஞ்சன் உளுந்தூர்பேட்டை

- மனோரஞ்சன்
தேடுகின்றேன் நான்...

தேடுகின்றேன் நான்.......
வாங்கிய கடனை திரும்பகேட்பதற்கு முன் திருப்பிக்கொடுக்கும் மானிடர்களை,
தேடுகின்றேன் நான்.......
எனது இந்தியாவில் தொண்டன்அல்ல அரசியல்தலைவன் தீக்குளிப்பதை,
தேடுகின்றேன் நான்.......
பணம் தராமல் ஓட்டுக்கேட்கும் அரசியல்வாதிகளை,
தேடுகின்றேன் நான்.......
பணம் கேட்காமல் ஓட்டுப்போடும் வாக்காளர்களை,
தேடுகின்றேன் நான்.......
தேர்தல் இல்லாத நேரத்தில் தொகுதிமக்களை கை எடுத்து வணங்கும் எம்மெல்யேக்களை,
தேடுகின்றேன் நான்.......
சட்டசபையில் எதிர்கட்சியை கேள்வி கேட்கும் எம்மெல்யேக்களை,
தேடுகின்றேன் நான்.......
பொதுக்கூட்டத்தில் எதிர்கட்சியை கேள்வி கேட்காத எம்மெல்யேக்களையும்,
தேடுகின்றேன் நான்.......
வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை அணியாத அரசியல்வாதியை,
தேடுகின்றேன் நான்.......
தோலில் துண்டு போடாத அரசியல்வாதியையும்,
தேடுகின்றேன் நான்.......
முன்னும், பின்னும் கார்படை சூழாமல் காரை தானே ஓட்டிப்போகும் அரசியல்வாதியை,
தேடுகின்றேன் நான்.......
அந்தக்காரில் வெட்டியாய் நால்வர் இல்லாமல் போகும் அரசியல்வாதியையும்,
தேடுகின்றேன் நான்.......
ஸ்விட்சர்லாந்தின் திசையறியா அரசியல்வாதியை,
தேடுகின்றேன் நான்.......
ஆஸ்ட்ரேலியாவுக்கு தன்மக்களை படிக்க அனுப்பாத அரசியல்வாதியையும்,
தேடுகின்றேன் நான்.......
வீட்டுக்குள் மருமகள் வர-தட்சினை கேட்காத குடும்பங்களை,
தேடுகின்றேன் நான்.......
தனிக்குடித்தனம் போகும் மகளை கண்டித்து தடுக்கும் தாயை,
தேடுகின்றேன் நான்.......
தனிக்குடித்தனம் போகும் மருமகளை வாழ்த்தியனுப்பும் மாமியாரை,
தேடுகின்றேன் நான்.......
போனவருடம் கட்டிக்கொடுத்த தன்மகள் வாந்தியெடுக்காமல், இந்தவருடம் வீட்டுக்கு வந்த மருமகள் வாந்தியெடுப்பதை கண்டு பூரிக்கும் மாமியாரை,
தேடுகின்றேன் நான்.......
மகள் இறந்த பிறகும் மருமகன் நல்லாயிருக்க வேண்டுமென நினைக்கின்ற மாமன்-மாமியாரை,
தேடுகின்றேன் நான்.......
மகன் இறந்ததினால் மருமகளுக்கு மறுமணம் முடித்து வைக்கும் மாமன்-மாமியாரையும்,
தேடுகின்றேன் நான்.......
மாமியார் மடியில் படுத்துக்கொண்டு டிவி பார்க்கும் மருமகளை,
தேடுகின்றேன் நான்.......
டிவியில், ஸீரியல் பார்க்கபிடிக்காது என்று சொல்லும் மாமியார்-மருமகளையும்,
தேடுகின்றேன் நான்.......
மருமகளுக்கு பேண் பார்க்கும் மாமியாரை,
தேடுகின்றேன் நான்.......
மாமியாரின் கால்நகத்தை வெட்டிவிடும் மருமகளையும்,
தேடுகின்றேன் நான்.......
துபாயிலிருந்து வீட்டிற்கு போண்பேசும்போது பணம் கேட்காமல் பேசிமுடிக்கும் குடும்பத்தினரை,
தேடுகின்றேன் நான்.......
கணவன் வாங்கி வந்த நெக்லஸை நாத்தனார் கழுத்தில் போட்டு அழகு பார்க்கும் மனைவியரை,
தேடுகின்றேன் நான்.......
அழகு பார்ப்பதற்காக போட்ட நெக்லஸை சந்தோஷமாய் கழட்டிக்கொடுக்கும் சகோதரியை,
தேடுகின்றேன் நான்.......
வரும்போது உங்க மச்சானுக்கு கோல்ட்வாட்சு எடுத்து வாங்கண்ணா என்று சொல்லாத சகோதரியை,
தேடுகின்றேன் நான்.......
பேச்சே வராத குழந்தையிடம் ஜிமிக்கி வாங்கிட்டு வாங்க மாமான்னு சொல்லு என்று சொல்லாத சகோதரியையும்,
தேடுகின்றேன் நான்.......
எப்ப கேன்சலில் வருவீர்கள் என்று கேட்கும் மனைவியர்களை,
தேடுகின்றேன் நான்.......
வரும்போது ரெட்டைவட செயின் எடுத்து வாங்க என்று சொல்லாத மனைவியர்களையும்,
தேடுகின்றேன் நான்.......
வாங்கும் இடத்தை மருமகள் பெயரில் முடிக்கச்சொல்லும் தாயாரை,
தேடுகின்றேன் நான்.......
வாங்கும் வீட்டை மாமியார் பெயரில் முடிக்கச்சொல்லும் மனைவியரை,
தேடுகின்றேன் நான்.......
காலேஜூக்கு போகனும்னா ஹீரோ ஹோண்டா வேண்டுமென டிமாண்ட் வைக்காத மகனை,
தேடுகின்றேன் நான்.......
மகனுக்கு காரியம் சாதிக்க கணவனுக்குப் பிடித்த கீரைப் போண்டா செய்து கொடுக்காத மனைவியரை,
தேடுகின்றேன் நான்.......
கல்லானாலும் கணவன் என்று நினைக்கும் பூவையரை,
தேடுகின்றேன் நான்.......
மண்ணானாலும் மனைவி என்று நினைக்கும் ஆடவரை,
தேடுகின்றேன் நான்...
தேடுகின்றேன் நான்...
தேடுகின்றேன் நான்...
தேடுகின்றேன் நான்...

-கிலர்ஜி,அபுதாபி

- கிலர்ஜி
தவறி ஒரு முத்தம்

கால்தவறி இடரி விழுந்தாய்
தவறி உன் முத்தம் என்மீது சித்தமானது
நீ கொஞ்சம் அனுமதி வழங்கினால் நானும் இடரி விழுகிறேனே

மை

பெண்மையை கண்களில் பூசியவள்
வாய்மையை உதட்டில் பூசிக்கொண்டு, தாய்மையை வயிற்றில் பூசிக்கொண்டு கண்களில் கரு"மை"யை பூசிக்கொண்டால்

தண்ணீர் சிலை

அலங்காரம் செய்யப்பட்ட சாமி சிலைபோல தெரிந்தாலும்
நீ சிலையல்ல பெண்ணே
மாறாக அலையாக அடிக்கிறாயே
நான் தீண்டும் போது சிலையாக இருந்துவிடேன்

அந்த சுவிட்ச் எதுக்கு

நான்கு சுவிட்ச் இருக்கிறது.
ஒன்று மின்விசிறிக்கு
இன்னொன்று மின்விளக்குக்கு
மற்றொன்று தொலைக்காட்சிக்கு
இன்னொன்று இருக்கிறதே
அது எதுக்கு ஒரு வேளை எனக்கா
சுவிட்ச் போட்டுத்தான் பாருங்களேன்

தடவலும் அலுப்பும்

கடல்அலை கரையை தடவுகிறது
காலை மதியம் மாலை இரவு நள்ளிரவு அதிகாலை என.
மறுநாளும் இதேபோல தடவுகிறது காலை மதியம் மாலை இரவு நள்ளிரவு அதிகாலை என.
ஒரு வேளை கடலுக்கு சலிக்காதா என்ன

மேக கேமரா 99 மெகாபிக்ஸல்

கொஞ்சம் இரு
ஒரு புகைப்படம்
என சொன்ன பின்பும்
மறைந்து போன வானவில்லே
உன்னை பழிக்கு பழிவாங்குகிறேன்
பார் என கூறிக்கொண்டே
மின்னல் கேமராவில்
முறைத்து கொண்டே
போஸ் கொடுத்தேன்

குழப்பம்

அதில் க் வருமா வராதா என்பது முதல் குழப்பம்
இரவுக்கு பின் பகலா இல்லை பகலுக்கு முன் இரவா என்பது இரண்டாம் குழப்பம்
கண்ணாடியில் நான் தெரிகிறேனா இல்லை என்னை கண்ணாடி பார்க்கிறதா என்பது மூன்றாவது குழப்பம்
கோழியில் இருந்து முட்டையா இல்லை முட்டையில் இருந்து கோழியா என்பது நான்காவது குழப்பம்
இவ்வாறு இருக்க வந்துவிட்டார்கள் இவன் நல்லவனா கெட்டவனா என கேட்க.

நோபல் பரிசு

அவனுக்கு நோபல் பரிசு
இவனுக்கு புக்கர் பரிசு
இன்னொருவனுக்கு பாரத ரத்னா
எனக்கு ஆறுதல் பரிசாவது கொடுங்களேன் கொஞ்சம் பார்த்திட்டு தந்துவிடுகிறேனே

வந்ததில்லை

விகடனில் வந்ததில்லை
குமுதம்த்தில் வந்ததில்லை
கல்கியில் வந்ததில்லை
ஆனால் என் யோசனையில் வந்திருக்கிறது நான் எழுதிய கவிதைகள்

மன்னிப்பு

வார்த்து எடுத்தேன் வார்த்தைகளை..
பழுக்க காய்ச்சினேன்..
பின்பு விசை பலகையில் அடித்தேன்.
இதோ வலிமையான வார்த்தை தயார்.
மன்னிப்பு

வா எரிக்கிறேன்

தாமரை பூக்கள் போல சூரியனை கண்டால் தான் மலர்வேன் என்ற ஆணவமா பெண்ணே!
நானும் சூரியன் தான்..
வா எரிக்கிறேன்..

-நேதாஜிதாசன், இந்தியா

- நேதாஜிதாசன்
என் எல்லாப் பாடல்களும்
உனக்கான
கரையிலேயே நிற்கின்றன
கிளிஞ்சல்களைப்
பொறுக்கிக் கொண்டு.

-கேப்டன் யாசீன்

- கேப்டன் யாசீன்

Share with others