விழித்திருக்கும்போதே
இதழ்கள் பிரிக்கப்பட
இலைகள்
உதிர்ந்து போயின.
புழுக்களுக்குப் பயந்து
வெளியில் நீட்டிய வேர்களை
சூரியன்
தீய்த்துப் போட்டது.
இதமான காற்றில்
மறந்தபடி
மனத்தின் ஊறலை
வேடிக்கைப் பார்க்கிறேன்.
மறத்துப் போகும்
மான உணர்வுகளில்
சிதைந்து கொண்டிருக்கிறது உறவு
முரண்பாடுகள்
நெருடல்கள்
உடன்பாடில்லாத சில போதுக்குள்
கடத்தப்படுகின்றன.
எங்களின்
மகிழ்ச்சியோடு எதுவோ
னெடுனேர சல சலப்பில்
புரிந்தது
மறைந்திருந்தது கண்ணீர்
எப்பொழுதும் போல்
வக்கணைக்கிறது சமூகம்.
முனைவர் ப. குணசுந்தரி தர்மலிங்கம்
வால்பாறை
தலையில் கைவைத்ததுத்
தனிமையில்
மயங்கி நிற்காதே
மனிதனே,
உறவு வலைகளில்
உயர்ந்தது நட்புதான்..
மரத்தில் படரும் கொடியாய்
மனிதர்
மனத்தால் பின்னிப் பிணைவதுதான்
நட்பு..
பிரித்தல் என்பது
இருவரில் ஒருவர்
மரணத்தில்தான் நடக்கும்...!
ஓ,
இதுதான்
மரணம் தின்ற நட்போ...!
-செண்பக ஜெகதீசன்...
மனிதம் மரணித்தது
மனங்களில் நட்பு பிறக்கிறது
தவிப்புகள் தடைகள் ......
நண்பனின் கைகள் தாண்டிகள்........
உறவு நெருடல்களில்
நயக்கிறது நட்பின் நீட்சி
காவிய தணிப்புகளில் நண்பன்
நிம்மதி மூச்சி
வானத்தின் இறக்கை நட்பு
மேகத்தின் வேகம் நட்பு
தாகத்தின் தணிப்பு நட்பு
இன்னொரு விம்பம் நட்பு
உடலைத்தின்னும் மண்ணிற்கு
உணர்வுகளைச் சீண்ட முடிவதில்லை
உதிரமெங்கும் ஊறிய உனக்கு மரணம்
வந்ததென்று வருத்தமுமில்லை
தாயின் வருடல்கள் முதல் நண்பன்
எந்தையின் முத்தங்கள் அடுத்த நண்பன்
பழகிய உறவுகள் எல்லாமே மொத்த நண்பர்
கடைசியாய் எனக்கு நானே உற்ற நண்பன்
மரணம் தின்ற நட்பு
மரணப்படுக்கை சீண்ட
இழக்கிறேன் எனை நானே
-நேகம பஸான்,இலங்கை
உன்னை
காணாமல் இருந்திருந்தால்
இப்போது
நான் மரண கிராமத்தில்
வாழ வேண்டி இருந்திருக்கும் .
உன்னோடு பேசியதனாலே
தானே என்னை கூட்டிச்செல்ல
வந்த மரணத்தையும்
உன் நட்பு தின்றுவிட்டது.
-உடுவையூர் த.தர்ஷன்
மலர்களின் மென்மை கொண்ட
இதழ்களின் மேடையில்
நட்புடன் உன்னை
நாட்டியமாடவிட்டேன்.
புகை சிறகுகள் விரித்து
புத்துணர்ச்சி வானத்தில்
பறப்பதற்கு என்னையும்
அழைத்துச்சென்று
முதலில் நீ கரியானபோது
நான் மகிழ்ந்தேன்
உன் மரணத்தில் நான்
மகிழ்ந்ததற்காக
மெல்ல மெல்ல நீயும்
உன் சகாக்களும்
நட்புறவாடி என்
ஆணிவேரையே
அசைத்துவிட்டீர்களே!
கூடாத நட்பு
குடி கெடுக்கும் என்பது
இதுதானா சிகரெட்டே...!
-மெய்யன் நடராஜ்
இலைகள் உதிர்வது...
மரங்களின்
மரணமல்ல..
அது-
இன்னொரு
தளிர்களின் தவம்.
கவலைத்தவிர்
மனிதா..
எந்த உயிர் நட்பையும்
மரணம் வெல்வதில்லை.
உயிரோட்டமாய்
நிணைவுகள்
நம்மில் வாழும் வரை.
-மதுக்கூர் சர் மதிநா
துபாய்.
நான் பார்த்திருந்தபொழுதே
காணாமல் போனதென் பாதைகள்..
மரணம் என்பது
உறவுகளைத் தானே
பிரிக்கும்..
உணர்வுகளை அது
என்ன செய்யும்..
ஒரே கோட்டில் பயணித்த
இரு புள்ளிகள்
துண்டாடப்பட்ட துயரில்
துவழ்கிறது மனம்..
உன் வார்த்தைகள்
காதுகளில் ரீங்காரமாய்..
நான் எண்ணாத விசயங்களை
இலகுவாய் உரைப்பதிலும்
பணிகளை முடிப்பதிலும்
வியந்துபோன நாட்கள்
இப்போதும் விஸ்வரூபமாய்..
பாசம் அன்பு நேசம் கடந்து
நட்பென்ற நாண்
நீண்டு கிடந்ததை
அறுத்தவர் யார் என்று
இங்கு நான் -விம்மலுடன்
விசாரணை நடாத்துகிறேன்..
-அம்பலவன்புவனேந்திரன்..
இறைவா
நல்லோர் தீயோர்
என்றில்லாமல் எல்லோருக்கும்
வைத்தாய்.. மரணம்
அந்த மரணம் எனக்கு
ஒன்றும் புதிதில்லை
எத்தனையோ முறை
நான் மரணித்திருக்கிறேன்..
தோல்வியால் மூச்சிறைத்து
துரோகத்தின் வலியில்
நம்பிக்கை இழந்த நாட்களில்- என
எத்தனையோ முறை
நான் மரணித்திருக்கிறேன்..
ஆனால் ஒவ்வொரு முறையும்
என்னை மீண்டும் உயிர்த்தெழச்செய்வது
மரணம் தின்ற நட்பு மட்டுமே..!
- பாரதிமோகன்
அந்த அந்தியில்
மேகங்கள் கூட அழுதழுது கன்னம் சிவந்திருந்தது
என்றாலும் அலைகள் மட்டும் புன்னகைத்துக்கொண்டன
இதயத்தின் கைகளோடு கைகோர்த்திருந்த சூரியன்
கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டபோது
எனக்கான எனக்கே எனக்கானதான
வெளிச்சத்தின் நட்பை மரணம் தின்று விட்டது
மெய்யன் நடராஜ் (தோஹா கத்தார்)
புல்லின் நுனிதனில் அமர்ந்து -
அதனுடன் சிரித்து அளவளாவி
மகிழ்ந்திருந்த பனித்துளி...
நொடிகளில் மரணத்தை தழுவியது....
இது என்ன?? - மரணம்
தின்று விட்ட நட்போ??
அடர்ந்த மரத்தின் கிளைதனை
நட்புடன் நாடிநின்ற இலையும்
உதிர்ந்த நொடியதில் - அங்கு
இலையும் கிளையும்
கொண்டிருந்த நட்பினை
மரணம் தின்றுவிட்டதோ???
பி.தமிழ்முகில்
இறைவா
நல்லோர் தீயோர்
என்றில்லாமல் எல்லோருக்கும்
வைத்தாய்.. மரணம்
அந்த மரணம் எனக்கு
ஒன்றும் புதிதில்லை
எத்தனையோ முறை
நான் மரணித்திருக்கிறேன்..
தோல்வியால் மூச்சிறைத்து
துரோகத்தின் வலியில்
நம்பிக்கை இழந்த நாட்களில்- என
எத்தனையோ முறை
நான் மரணித்திருக்கிறேன்..
ஆனால் ஒவ்வொரு முறையும்
என்னை மீண்டும் உயிர்த்தெழச்செய்வது
மரணம் தின்ற நட்பு மட்டுமே..!
-திருமலைசோமு
சென்னை
எள்ளுருண்ட எடுத்தாந்து
எனக்குமட்டும் கொடுத்திருக்க
எத்தனபேர் எதுத்தாலும்
என்கூட இருந்திருக்க
தடுக்கி விழுகயில தாங்கிப் பிடிச்சுருக்க
அழுது புரளயில ஆறுதலா இருந்திருக்க
பால்குடி மறக்கயில பத்திக்கிட்ட பழக்கமுடா
கால்கட்டு போடயில காணாமப் போயிருமா
செத்தடங்கும் வேளவர இந்த
சகவாசம் போகாது - எலேய் நீ
செத்தாலும் சோகமில்ல அங்க
செதைவிறகா நானிருப்பேன்
கனல்வனன்
நண்பா..!
இது இப்படி ஆகுமென்று
எவர் நினைத்தார்..
நிஜம் என்பதை ஒவ்வ
மனம் இன்னும் மறுக்கிறது..
தனிமை என்னை
தவணை முறையில் கொல்கிறது..
நம் நட்பை ஊரே வியந்து
விசாரணை செய்தது..
இப்படி - விரைவாய்
விதி நம்மை பிரிக்கும் என்பது
காலத்தின் கணிப்பு என்று
என்னை என்னால்
தேற்றிட திராணியில்லை
நீ முதல்வன் என்பதை
மரணத்திலும் நிரூபித்தாய்..
உன் நினைவுகளே
உன் நட்பின் வலிமையை
எனக்கு வலியுறுத்துகிறது..
நாம் நட்பால்
இணைந்தோம் மகிழ்தோம்..
இப்போது -மரணம்
பாரபட்சம் பாராமல்
பிரித்துத் தின்றது..
நினைவுகளின் நெருடல்
நெருஞ்சியாய் தைக்கிறது..
என் வலி தீர
வழி சொல்ல-
கனவிலாவது காட்சி தருவாயா..
-அம்பலவன்புவனேந்திரன்..
பழகிய நட்பு..!!
நிலையாய் என்றும்..!!
நிலைக்கும் என நினைத்த
நட்பு..!!
பள்ளியின் இறுதியில்
மெல்ல மெல்ல
மறையத் தொடங்கியது
இன்று மெல்ல மெல்ல
மரணத்தின் பிடியில்
மாட்டித் தவிக்கிறது..!!
மனோ.மு
காரணம் இல்லாமல்
காத்திருந்த நட்பு - இன்று
காரணம் இல்லாமல்
பிரிய நினைக்கிறது - அன்று
புரியவில்லை இது
சந்தர்பவாத நட்பு என்று
அளவுக்கதிகமாய் அன்பு
வைத்தபின் தூக்கி எறிய
முடியவில்லை உன்னை யாரோ என்று..........
இளமாறன்
அதனுடன் சிரித்து அளவளாவி
மகிழ்ந்திருந்த பனித்துளி...
நொடிகளில் மரணத்தை தழுவியது....
இது என்ன?? - மரணம்
தின்று விட்ட நட்போ??
அடர்ந்த மரத்தின் கிளைதனை
நட்புடன் நாடிநின்ற இலையும்
உதிர்ந்த நொடியதில் - அங்கு
இலையும் கிளையும்
கொண்டிருந்த நட்பினை
மரணம் தின்றுவிட்டதோ???
- பி.தமிழ் முகில்
எத்தனை
விண்மீன் இருந்தாலும்
நிலவிற்குதான் அழகு.....
அது போல
வாழ்வில் எத்தனை
உறவுகள் இருந்தாலும்
நட்பிற்கு தான் அழகு.....
-சோ.முத்தரசு
கிருஷ்ணா