aankal
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-06-06 00:00

ஆண்கள்...

பாசத்தின்
உருவங்கள்
உளைப்பில்
எட்ட முடியாத சிகரங்கள்
ஆதிக்கத்தில்
பணிந்து
போகவல்லவர்கள்
நீதியில்
நேர்மைமிக்கவர்கள்
இருட்டில்
பயமறியா வீரர்கள்
மொத்தத்தில்
எதுவுமே இல்லாதவர்கள்

மயூரி

- மயூரி, 2011-06-06
ஆண்கள்...

வாழ்க்கை ஓவியத்தின்
வனப்பை
வாடிவிடாமல் காப்பவர்கள்தான்
ஆண்கள்..
அழகைத் தேடியலைந்து
அழிப்பவர்களல்ல..
அழிபவர்களல்ல...!

-செண்பக ஜெகதீசன்...

- செண்பக ஜெகதீசன், 2011-06-07
ஆண்கள்

'பொறுப்பு' என்ற சிற்பத்திற்கு பிம்பத்தைக்
கொடுத்து
வீரத்தின் சிலிர்ப்பில் ஆண்மையாய் நின்று
அன்பிற்கும் ஆசைக்கும்
கடிவாளமிட்டு
நாளும் இயந்திரகதியாய்...
சுற்றித் திரிந்து
என்றும் சுமை தாங்கியாய்....
வாழ்க்கை என்ற விளக்கிற்கு
ஒளியை கொடுக்கும்
மகான்கள்!

துர்கா
தமிழிநாடு

- துர்கா, 2011-06-13
ஆண்கள்

எதிர்மறை
பிம்பங்கள்
ஒன்றையொன்று
ஈர்க்கின்றன
ஒரு பிம்பம்
மட்டும் தன்னை
மீசை, பிடிவாதம்,
கவுரவம், வீராப்பு
ஆண்மை என்று
ஆரவாரித்துக் கொண்டே
இருக்கின்றது.
மறு பிம்பம்
வாய்பொத்தி
கைகட்டி இட்ட
வேலைகளைச்
செய்ய மட்டுமாம்.
"ஆ" என்ற மாத்திரையிலே
இரட்டிப்புத் தன்மைக்
கொண்டவர்கள்
"ஆண்கள்"

சுகவினோத்குமார்
சேலம்

- சுகவினோத்குமார், 2011-06-13
ஆண்கள்

பெண்கள் கண்ணின்வழி நீரில் கரைபவன்
பித்தனென்றாடியே பின்னே அலைபவன்
எண்ணுவதெல்லாமே பெண்ணும் மறுத்திட
என்ன சொன்னா ளதைஇட்டு முடிப்பவன்

கண்ணே மணியேயாம் கற்பனைசொற்களைக்
காதி லினித்திடக் கூறி முடிப்பவன்
மண்ணில் உன்னைவிட இல்லை யழகியே
மாசறு பொன்னென்று பொய்யை உரைப்பவன்

அன்னை சொல்கேட்டு அடங்காதவன்பின்னை
அன்பென்று பொய்சொல்லி அஞ்சிக்கிடப்பவன்
என்ன செய்வான் ஈசன் பாதி அளித்திட்டான்
இங்கே முழுதையும் அர்ப்பணித் தேவிட்டான்

கிரிகாசன்

- கிரிகாசன், 2011-06-19
ஆண்கள்

பெண்களை
அடக்கி ஒடுக்கியாளும்
கொலைகார
முட்டாள்கள்.
பெண்களோடு
நீதி நேர்மையென்று
போராடிக் கொண்டிருக்கும்
பைத்தியக்கார
முட்டாள்கள்.
பெண்களை
அவர்கள் விருப்பத்திற்கு விட்டு
அவர்களுக்கு சேவைசெய்யூம்
நற்குணமுள்ள
முட்டாள்கள்.
அதுமட்டுமல்ல
இப்படிப்பட்ட
மேலும் பலவிதமான முட்டாள்களையூம்
அவர்களை உண்டாக்கி உருவாக்கும்
மூலமுட்டாள்களையூம்
பெண்கள் பெற்றெடுக்க
காரணமான கணவ் ஆண்கள்.

ந.அன்புமொழி
சென்னை.

- ந.அன்புமொழி சென்னை., 2011-06-21
ஆண்கள்

அளவுக்கு அதிகமாய்
அன்பு செலுத்துபவர்கள்,
அடங்கிப்போவதை
அறவே வெறுப்பவர்கள்,
தன்னம்பிக்கை, சுதந்திரம் என,
வளைய வருபவர்கள்,
அன்னைவே தெய்வமென
தொழுவதில் வல்லவர்கள்,அவசியமில்லாமல்
அழுவதில்லை இவர்கள்!
முரட்டுத்தனம், பிடிவாதம்
இவர்களது உடன்பிறப்பு!

என்றாலும்.......
பெண்களை ஈர்க்கும் இவையே
தனிச்சிறப்பு!
வீரம் புரிவதில் விருப்பமுண்டு,
வாலிபத்தில் பிடிவாதமும்
பிடிப்பதுண்டு!
ஆண்களில்லா பெண்களின் உலகம்,
அப்பப்பா! கொடும் நரகமே!

தனலட்சுமி பாஸ்கரன். திருச்சி
(தமிழ்நாடு)

- தனலட்சுமி பாஸ்கரன், 2011-07-29
ஆண்கள்

ஆண்மையின் அர்த்தத்திற்கு
வள்ளுவனின் வாய்மொழி வேண்டும்.
கற்பினைப் பொதுவில் வைக்கும்
கண்ணியம் அதிகம் வேண்டும்.
அவ்வப்போது பெண்மை தலைதூக்கி
அணைத்துக் கொள்ள வேண்டும்.
உரிமையைக் கொடுப்பதிலே
உமை மணாளனாக வேண்டும்.
சமுதாயப் பார்வைக்கு
சத்திய சோதனை ஆசானாக வேண்டும்.

-சித. அருணாசலம்
சிங்கப்பூர்.

- சித. அருணாசலம், 2011-11-07
ஆண்கள்...

வயதுக்கு வந்ததை அறிந்து - தனக்கு
வாலிபத்தில் நடப்பதையும் புரிந்து,

அப்பாக்களின் பணத்தினை செலவழித்து, - கிடைக்கும்
அப்பாவிகளின் பணத்தினையும் சேர்த்தே செலவழித்து

சிறப்பு ரயிலில் பயணித்து - எதிர்ப்பவரகளை
சட்டங்களை கொண்டே கவணித்து,

வாழ்வில் எல்லா வளமும் பெற்றுவாழும்
பெண்களாக பிறக்காதவர்கள் "ஆண்கள்".

சகோதரன் ஜெகதீஸ்வரன்

- சகோதரன் ஜெகதீஸ்வரன், 2011-11-10
ஆண்கள்...

உலகம் சூட்டிவிட்ட
உவமை
பெண்ணுக்கு பொருத்தமான
ஆண்மை

இதயத்தில்
கரு சுமக்கும் அறிவு
இம்மை அன்பினில்
உறவாகும் பணிவு

துணிவினில்
வெற்றி தேடும் ஆற்றல்
தொடர் ஆக்கத்தில்
பயிற்சி செய்யும் விழிப்பு

பெண்மைக்கு
பெருமை சேர்க்கும் உண்மை
இப்பிறவிக்கு இது புரிந்தால்
நன்மை.

அதி.இராஜ்திலக்

- அதி.இராஜ்திலக், 2011-11-11
ஆண்கள்

இவனை புரிந்த பெண்,இவனை அடிமை
ஆக்கிவிடுவாள் .
இவனை புரியாதவள் ,வாழ்கையில்
வழி தேடி ,இவனை குற்றவாளி என்கிறாள்
இவன் உண்மையிலைய அழகானவன்,பாசமுல்லவன்
பண்புள்ளவன் .எதிர்பால் இருந்து உன் உண்மையின் பார்வையில் ..

அப்துல்லா பேர்னாட்சா
மலேசியா

- அப்துல்லா பேர்னாட்சா, 2013-01-01

Share with others