capitalism
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-10-25 00:00

முதலாளித்துவத்தின் சுறண்டல்…

மாடுபோல் உழைத்து
மண்ணைத் தோண்டி
பொன்னெடுத்துக் கொடுத்தாலும்
போதாது இவர்களுக்கு..
உன்னைச் சுறண்டி
உழைப்பைச் சுறண்டி
உதிரம் குடித்து
உடல் வளர்ப்பவர்கள்..
மனிதப் பிறப்பின்
மகிமையைக் கெடுப்பவர்கள்-
சந்தனக் குழம்பில
சாக்கடை சேர்ந்தாற்போல..
விழிப்பாய் இரு
உழைக்கும் தோழனே…!

செண்பக ஜெகதீசன்…

- செண்பக ஜெகதீசன்
முதலாளித்துவத்தின் சுறண்டல்

கல்விசாலையில்
சிறகடிக்கும் வயதில்
பஞ்சாலை நரிகளால்
உழைப்புடன்
உடலும்
சுரண்டப்பட்டு
கனவு கானவும்
இயலாது
எதிர்க்காலசுமங்கலிகள் காற்றில்லாடுகிரர்கள் 'பஞ்சு' ஆக?

வஞ்சிநாதன் இந்தியா

- வஞ்சிநாதன் இந்தியா, 2010-10-25
முதலாளித்துவத்தின் சுறண்டல்

இயல்பு வாழ்வின்
இறகொடித்து
இயந்திரமாக்கினார்

பண்டமாற்றை
பணமாக்கி
பண்பாடு அகற்றினார்

படிக்கும் கல்விதனை
பணம் செய்வதற்கென்றே
பதியச் செய்தார்

விளையும் பொருளில்
விதிகள் கொண்டு
வினை மாற்றி வீணாக்கினார்

விலை நிலம்
விஷமாக, விவசாயியை
விஷம் உண்ணவைத்தார்

தாய்ப்பால் முதல்
தாரம் சுமக்கும் கரு வரை
தனி விலை வைத்தார்

உள்ளாடை போல்
உள்ளுருப்புக்கும்
உரிய விலை செய்தார்

விலை வைக்காமல் விட்டது
மனிதன் விடும் கழிவும்
உயிர் விட்ட உடலும்

காலி உடலின் கழிவுகளையும்
கடைசியில் மிஞ்சும் சதைப் பிண்டத்திர்க்கும்
காப்புரிமை செய்துவிட்டு . . .

ஐயன்மீர் . . ., தயவுசெய்து அதற்கும்,
விலை வைத்து விடுங்கள்
உயிர் விடும் முன் முதலாளியாகிறேன்

மார்கண்டேயன்
http://markandaysureshkumar.blogspot.com

- மார்கண்டேயன், 2010-10-30
முதலாளித்துவத்தின் சுரண்டல்

இதமான விளக்கம் இதற்கில்லை
எண்ணமெல்லாம் ஈட்டும பொருள்மீதாய்
இதயமற்றோர் சுயஇலாபந் தேடி
எல்லா வழிகளிலும் பாவக் கணக்கெழுதி
மதங்கொண்ட மனத்தினராய் மனிதாபிமானம் மறந்து
மேன்மைமிகு தொழிளாளர் உழைப்பை உறிஞ்சி
பதமாக பணத்தின்மேல் பணமடுக்கி
பாட்டாளிமக்கள் வியர்வைதனைப் பன்னீராக்கி
மேதக மனிதரென மேல்விலாசம் தமக்கிட்டுச்
சாதகமாய்ச் சலுகைகள் அளிப்பதுபோல் நடித்து
ஆதாயம்தனை பாதாளம் வரைப் பாயவிட்டு
வேதனை சோதனைகளை உழைப்பாளிகளுக்காக்கி
பாதகம் புரியும் இவர்களுக்கு வட்டியோடு முதலுமாய்
பாவச்சம்பளம் வாழ்நாளில் காத்திருக்கும்

பத்மாஷனி மாணிக்கரட்னம்.

- பத்மாஷனி மாணிக்கரட்னம்., 2010-11-12
முதலாளித்துவத்தின் சுரண்டல்.

இரைப்பைச் சுவரை அரிக்கும்
சுரப்பிகள் போன்று இதயமற்று
அட்டையாயும், உண்ணியாயும்
திட்டமிட்டு மெலிந்தோரை உறிஞ்சுவர்;
மட்டமான முதலாளிகள்,
எட்டிக் காயாகும் முதலாளிகள்.
தொழிற் கண்ணியம் பேணாத
முதலாளிகள் சமூகப் புற்றுநோய்கள்.

உலகமெங்கும் பரந்து
சுலபமாய் வட்ட மேசையிட்டு
கலகம் உருவாக்கும் காரணி
முதலாளித்துவத்தின் சுரண்டல்.
முதலாளியின்றேல் தொழிலாளியில்லை.
தொழிலாளியின்றேல் முதலாளியில்லை
என்பது எழுதாத உதட்டுவரி.
முழுதான உண்மையிது.

ஆற்றாமை பொறாமை நன்கு
அரித்தெடுக்கும் தொழிலாளியும்
முதலாளி வளர்ச்சியைத் தாங்காது
பொங்குவான் பொருமுவான்.
வண்டிற் சில்லும், கடையாணி
போன்று தான் உலகில்,
முதலாளி தொழிலாளி உறவும்,
விலகாத போராட்டமும்.

வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
15-11-2010.

- வேதா. இலங்காதிலகம்.
முதலாளித்துவத்தின் சுறண்டல்

முதலாளி தத்துவமே சுறண்ட லென்றே-என
மொழிதலிலே வேறுபாடு ஏதும் இன்றே
அதனாலே பிறந்ததுவே மேதினமும் ஒன்றே
அகிலமே கொண்டாடும் திருநாளாம் நன்றே
இதனாலே அடங்கியது முதலாளி உலகம்
என்றாலும் அங்கங்கே நடக்கிறது கலகம்
எதனாலே என்றாலே நல்ஊதியமே கோரி
எழகிறது போராட்டம் தடைதன்னை மீறி

சங்கங்கள எல்லாமே ஒன்றாக கூட-பெரும்
சங்கடம் முதலாளி நெஞ்சிலே ஓட
உங்களை அழைப்பதாய் ஓடிவரும் செய்தி
உடன்சென்று பேசிட ஒப்பந்தம் யெயதி
இவ்வாறு நடக்கிறது நாட்டினிலே இன்றே
இனிமேலும் ஆகாது சுறண்டலாம் ஒன்றே
எவ்வாறு நடந்தாலும் முடிவாக வெற்றி
என்றுமே உழைப்பாளி காண்பாரே வெற்றி

புலவர் சா இராமாநுசம்

- புலவர் சா இராமாநுசம், 2011-07-04

Share with others