Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

நீர்க்குறிப்புகள்

- கருணாகரன்

நீர்க்குறிப்புகள்
------------------------

தனித்த பயணத்தின் நெடுவழியில்
என்னுடல் அறிந்தது
ஒரு துளி ஈரத்திலிருக்கும்
நதியின் பெருங்கருணையையும் ஆழவூற்றின் பேரன்பையும்.

அக்கணம்,
நீக்கமற நிறைந்த நீரின் கருணை
சிறகை விரித்து அழைத்துச் சென்றது
தனதுலகப் பெருவெளிக்கு.

அங்கே
ஈரத்தின் கருணையில் விரியும் ஓருலகைக் கண்டேன்.
பச்சை மயமாகிய அவ்வுலகில்
கனிகளும் மலர்களும் காற்றின் ரகசிய நடனமும்
வாசனையும் இனிய சுவையும் குளிர்மையும்
ஒளிமிகக் கொண்ட காலமும் இருந்தன.

அவ்வெல்லையற்ற வுலகில்
ஆழப்படியிறங்கிச் செல்லச் செல்லத்
தன்னை வெளிப்படுத்தா நீரின் அழகு -
பச்சைப் பெருக்கில் நெகிழ்ந்திருந்தது
வனமாய், பயிராய், மலராய்க் கனியாய்...

பின்னொருபோது,
ஆகாய வெளியில் சிறகை விரிக்கத் தெரியும்
நீரின் அழகெல்லாம் நீலமா பச்சையா? எனத் திகைத்த மனதில்
ஒளிர்ந்தது, கருணையின் நிறமும் அன்பின் வர்ணமும்.

நிறமேயில்லை நீருக்கென்ற தருக்கத்தின்
நொறுங்கிய சிதறல்களில் ஒளிர்ந்தன
அன்பின் வர்ணமும் கருணையின் நிறமும்.

இன்னும்
வர்ணமும் வாசனையும் தன்னுடலாய்க் கொண்ட மலர்
ஒரு போது மலராயும் இன்னொருபோதில் கனியாயும்
தன்னுடலை நெகிழ்த்துகிறது எல்லையற்று.

வரண்டு நடுங்கிய உடலைத் தன்னிதழ்களால்
நெகிழ்த்திக் குளிர்விக்கும் நீரின் பேராற்றல்
கைவிட்டுச் செல்லும் மறதிப் பொருளின்
மங்கிய நினைவல்ல.

கனியின் நினைவாற்றல் மிகுந்த ஒவ்வொருதுளி நீரும்
தாகத்தின் பெருநிலையில் வெடித்துக் கிளம்பும் பெறுமானச் சுவடுகளே!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-09-10


அழ.பகீரதன்

14 years ago

கவிதை சிறப்பானது

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • பூக்குங்காலம்
  • பலியாட்டின் கண்கள்
  • பூனையின் நிழல்
  • சிரிக்கும் பறவை
  • இனி
  • அணில் மரம் பூனை
  • காத்திருப்பின் நிழல்
  • ஒரு வாழ்த்துப்பாடல்
  • மேலுமொரு விருந்தாளி
  • ஒரு மைதானக்காட்சி
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube