பூக்குங்காலம்
நான் நானாக இருப்பதிலும்
நீ நீயாக இருப்பதிலும்
ஏன் நம்மிடையே ஓயாத பிணக்கு?
உன்னை என்னுள் திணிப்பதையும்
என்னை உன்மீது ஏற்றுவதையும் வெறுக்கிறேன்.
உன் மகிழ்ச்சியை நீயே பாடுவதிலும்
என் பாடல்களை நானே இசைப்பதிலும்
ஆனந்த முண்டல்லவா?
உனது கனவுகளை நீயே வரைந்துகொள்
எனது வண்ணங்களை நானே குழைக்கின்றேன்
காலம் ஒரு பதிய பூவாய் மலரட்டும்
வானத்தில் அதன் மலர்ச்சி ததும்பட்டும்.
-கருணாகரன்
நன்றி:
’ஒரு பொழுதுக்காகக் காத்திருத்தல்’
மகிழ் வெளியீடு (ஈழம்)
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01