வாழ்த்துவோம்
சத்தி சக்திதாசன்
தன்னைத்தானே அறிந்த நேர்மை உள்ளங்கள்
தனக்குத்தானே உண்மையான நெஞ்சங்கள்
துணையாய் நடக்கும் நட்பின் சொந்தங்கள்
தூங்காதிருக்கும் இரத்தச் சொந்தங்கள்
வாழ்த்துவோம்
துணிவுடன் ஏழ்மையை எதிர்க்கும் இதயங்கள்
முட்களை வெட்டி பாதையமைக்கும் கரங்கள்
தன்னைக் கொடுத்துத் தாயைக் காக்கும் தனயர்கள்
துவளும் கால்களைத் தாங்கும் கொள்கைகள்
வாழ்த்துவோம்
வேண்டும் பொருட்களை வேண்டா ஞானங்கள்
தாண்டும் இன்பங்களை பகிரும் மனிதர்கள்
மீண்டும் மீண்டும் உதவும் உள்ளங்கள்
சீண்டும் போதும் பொறுக்கும் அறிவுகள்
வாழ்த்துவோம்
நாளைய உலகை மறக்கும் தௌ¤வுகள்
இன்றைய உலகில் சிரிக்கும் அதரங்கள்
நாளைய உலகை திறக்கும் சாவிகள்
எதிர்காலத்தின் மழலைச் செல்வங்கள்
வாழ்த்துவோம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01