பெண்
-------------
போகம்;
தெய்வம்,
போர்த்திவைப்பு,
மாறுபாடுகள்,
அழகு; சில நியதிகளின்
குறியீடு.
தவிர்ப்புகள் தவிர்த்த பூரிப்பு
அது இயற்கை.
அழகை ரசிக்குமாப்போல்
ஆண்களின் கோரத்துக்குள்
சிக்கும் ஒரு இயந்திரமாகி
சில நேரம்
நாக்கிளிப் புழு போலவும்…
ஒரு
அருவருப்பாகவும்…
குழந்தைகளை உற்பவிக்கும்
இயந்திரம் போலவும்;
வெறுப்பிலும் கலவி வேண்டும்,
ஆண்குறிகளினால் அழுத்தப்படும்போது
வலியோடும்…
உடைந்து அடங்கும் போது
இயலாத வளாகி…
மாதம் மாதம்
மாதவிடாய் கூட ஒரு அவஸ்தைதான்.
பெண்;
கண்ணீர்;
வலி
மனங்கள்…
என் யோனி… வெறுப்ர்டன்
போகம் மறுக்கும்
என்னாலும் முடியும்
உன்னை நிராகரிக்க…
எனக்கும் ஒரு அருகதையிருக்கிறது.
ஏனெனில்
நான்
ஒரு பெண்.
-நவஜோதி ஜோகரட்னம்.
லண்டன்
6.2.2009.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-02-16