Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

வாழ்வும் ஒரு காதல

- நவஜோதி ஜோகரட்னம்

வாழ்வும் ஒரு காதல்
--------------------------------------

இந்த மண்ணுக்குள்
ரகசியங்கள் புதுமைகள்
மறைந்து கிடப்பதுபோல்
எனக்குள்ளும் எத்தனை எத்தனையோ…

கணங்கள் தோறும்
என்னுள் கவிதைகள் திரள்கின்றன…

கவிந்து மிதந்து செல்லும்
மேகத் திரள்கள்
நிலவருகே வரும்போது
ஒளிமயமாகவும்
விலகிச் செல்லும்போது
கரிய நிழலாகவும்
ஜாலம் செய்கிறதே!

அது அன்றைய நிலவா?
அதே நிலவுதானே இன்றும்…
அந்த நிலவு கறள் படிந்து
நினைவை நனைக்கிறது…

இரக்கமற்ற பூமியில்
தினசரி நடக்கிறது போர்…

நிதம் போகும் உடல்களின் பயணங்கள்…
மண்ணில் பாய்கின்ற சோக அருவிகள்…
துக்கங்களை பூசிக்கொள்கின்ற முகங்கள்…

எனது ராகம் குழைந்து
குரல் இழைக்கையிலே நீ
அசிங்கத்தைப் பார்க்கிறமாதிரி
பெண் என்னை
முகத்தைச் சுளிச்சுக்கொண்டு
முறைச்சுப் பார்க்கிறாய்

பயந்து நடுங்கி
சுருங்கும் என் முகம்…
என் மென் உடலில்
வீரியத்தை வரவழைக்கின்றன…

வாழ்க்கை குரூரமானது என
திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டாலும்
அதன் மீதுள்ள காதலை
என்னால் உதறமுடியவில்லையே!


-நவஜோதி ஜோகரட்னம்
லண்டன்.
8.7.2008.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-07-15


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கசக்கின்றது காலம்
  • பெண்
  • கலங்கும் பார்வைகள்
  • இந்த நிஜமான உணர்வு
  • மௌனத்தை மறுக்கும் நட்சத்திரம்
  • அந்தநாள் கதாநாயகன்
  • மீண்டும் பிறப்போம்
  • கத்துகிறது என் கவிதை
  • மண்டலத்தில் ஒரு நாடு
  • சதா மௌனம்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube