- அன்பாதவன்


"கடைசி டினோசர்
ஒற்றையாய் ன்று கொண்டிருக்கிறது
அதன் ரோமங்கள் தொய்ந்து
களைத்துக் கிடந்தன
கடுங்கோடை இலைகள் உதிர்ந்து,
இலைகளுக்கு உள்ளே
மறைவதைப் பார்த்துக்கொ ண்டிருக்கிறது
அதன் கழுத்தில் அமர்ந்து
ஊர்ந்து செல்லும் கரப்பான் பூச்சி
போகட்டும் என்று பொறுத்திருந்தது
இன்னும் சில வினாடிகளில்
கழுத்தைத் தாழக் குனிந்து
விஷக் கற்றாழையைக்
கடிப்பதற்காய் காத்திருக்கிறது
இதுவரை
பார்க்கப்படாதப் பறவைகள்
தொலைவிலிருந்து கத்துகின்றன
சீக்கிரம் செத்துப் போ
சீக்கிரம் செத்துப்போ"
-தேவதச்சன்(1)


நம் கண் முன்னே கரைந்து காணாமல் போகும் 'இன்றைப்' போலவே நாம் பிறந்து,வளர்ந்து, நம்முடன் விளையாடிய இயற்கையும், சுற்றுச்சூழலும் ஒன்னொருக் கணத்திலும் இறந்துக் கொண்டே இருப்பதை, சூழலியலில் ஆர்வம் கொண்டவர் அறிவர்.சூழலியல் குறித்த கவலையும்,அக்கறையும் இன்றையச் சூழலில் தவிர்க்க இயலாத அம்சமாக வளர்ந்து வருகிறது

சூழலியல் என்பது வேறொன்றுமில்லை!நாம் வாழும் பூமி... நாம் காற்று வாங்கும் கடல்,தினமும் பார்க்கும் ஆகாயம்,தினசரி நுகரும் நீர், சுடும் நெருப்பு, நொடிகளொன்றிலும் சுவாசிக்கும் காற்று. நம்மை நம்மைச் சுற்றியிருந்து நமக்கு பயனளித்து வந்த இந்த அய்ம்பூதங்களுக்கு, அந்த நண்பர்களுக்கு நாம் செய்த கைமாறு என்ன? எவ்வளவுக்கெவ்வளவு சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்த முடியுமோ அவ்வளவுக்-கவ்வளவு மா'சுபடுத்தினோம்.கடலில் அணுக்கழிவுகளையும் வேதிக்கழிவுகளையும் கொட்டி அலைகடலைச் சீரழித்து கடல்வாழ் உயிரினங்களை கொலை செய்கிறோம்... ஏரியாய்.. குளமாய்..நதிப்படுகைகளாய் இருந்த இடங்களை ஏரியா ஏரியாவாய் மனைபோட்டு கூவிக்கூவி விற்கிறோம்.

நீர்ப் பிடிப்பு பகுதிகளில் அரசு கட்டடங்களை, பேருந்து லையங்களை உருவாக்கிவிட்டு மழைநீர் சேமிக்கச் சொல்லி சட்டம் போடுகிறோம். தொழிற்சாலைகளின் கழிவுப் புகைகளினால் காற்று மண்டலத்தை கரியாக்குகிறோம். ஓசோன் படலத்தைக் கிழித்து விட்டு உஷ்ணம்.. வெப்பம் எனக் கூச்சலிடுகிறோம்.

நாம் செய்கிற காரியங்கள் சூழல் பாதிப்பை உண்டாக்கி, நமக்கே துன்பங்களை கொடுக்கும் என்று தெரிந்தும் தொடர்ந்து இது மாதிரியான சூழல் கேட்டினை செய்துக் கொண்டே இருக்கிறோம்

வனங்களின் அழிவு, நதிகளின் அழிவாய்..மறைவாய்ப் போனதை நாமின்னும் உணர்ந்த்வரில்லை.குட்டிப்பையனின் வெடிப்பும், செர்னோபில் விபத்தும் நமக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே கூடங்குளம் காட்டுகிறது. கடலில் கழிவுகளைக் கொட்டிவிட்டு கரைகளை அழகுப்படுத்த முயற்சிப்பவர்களாகத்தான் நாமிருக்கிறோம்.

"சுற்றுச்சூழல் சிதைவுறும்போது ,அதனால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் தாம். மலைவாழ் பழங்குடியினர், தலித்துகள், பெண்கள் என இயற்கைச் சூழலின் சிதைவு வெவ்வேறுப் பரிமாணங்களில் நீர், நிலம், காற்று மற்றும் உயிரின வளம் இவற்றின் சீரழிவாக வெளிப்படும்போது முதலடி வாங்குபவர்கள் இவர்களே (2) "என சூழலியல் ஆய்வாளர் தியோடர் பாசுகரன் கூறுவதை நாம் கவனத்தில் கொண்டோமா?

'இன்றையச் சூழலின் நெருக்கடிகளையும், நெருக்கடிகளிலே அமிழ்ந்துபோகாத திமிறல்களும் உணர்வுகளும், எதிர்வினை கொள்கிற ஒரு சமூகத் தேவையை நமக்கு தந்திருகின்றன. சீரழிந்துவரும் பண்பாட்டுச் சூழல்களை மறுபரிசீலனை செய்யவும், புத்துருக் கொடுத்து மனிதவயப்படுத்தவும் நேரம் வந்திருக்கிறது..இதை உணர்ந்திடும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் இன்னும் புதிது புதிதாய்த் தோன்றியாக வேண்டிய ஒரு சூழ்லை-ஒரு கட்டாயம் ஏற்பட்டு வருகின்றது'-(3) என்கிற இலக்கியத்திறனாய்வாளர் பேரா.தி.சு.நடராசனின் கருத்துக்களும் கவனத்தில் கொள்ளத்தக்கன.

கவிஞர்கள் என்பவர்களும் நம் சமூகத்தில் ஓரங்கம்தான். சமூகத்தின் கழ்வுகளில் கவலையும், அக்கறையும் தீர்வுகளைத்தருகிறப் பார்வையோடும் விமர்சனத்தோடும் கவிதைகள் பிறப்பின் படைப்பாளிக்கும், மொழிக்கும் சிறப்பாக அமையும். தமிழில் மேற்சொன்னக் குணங்களோடு பரவலாக பல கவிதைகள் சூழலியல்குறித்து விவாதிக்கின்றன.. விமர்சிக்கின்றன.. வழிகாட்டுகின்றன....!

'இவ்வுலகம் இனியது
இதிலுள்ள வான் இனிமையுடைத்து
காற்றும் இனிது
தீ இனிது; நீர் இனிது; நிலம் இனிது
ஞாயிறு நன்று; திங்களும் நன்று
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
மழை இனிது; மின்னல் இனிது; இடி இனிது
கடல் இனிது; மலை இனிது; காடு நன்று
ஆறுகள் இனியனனௌலோகமும் மரமும் செடியும், கொடியும்
மலரும், காயும், கனியும் இனியன
பறவைகள் இனிய
ஊர்வனவும் நல்லன
விலங்குகளெல்லாம் இனியவை
மனிதர் 'மிகவும் இனியர்'(4)

ஆஹா...! மகாகவிக்குத்தான் எத்துனை நம்பிக்கைச் சிந்தனை. ஆனால் நடைமுறையில் பாரதி சிலாகிப்பதுபோல் உலகம் இனியதாகவா இருக்கிறது? நாம் ஒவ்வொருவரும் நம் மனசாட்சியின் இக்கேள்வியை எழுப்புவோமானால் பதில் என்னவாக இருக்கும்? கசப்பான மவுனம் தானே!

அறிவியல், தொழில்நுட்பம் என்ற பெயரில் வரைமுறையில்லா வளர்ச்சியில் வேகமாக நகரும் இன்றைய யதார்த்த உலகில் சூழலியல் பிரச்னை மிகமிக முக்கியமாய் பரிசீலிக்கப்பட வேண்டிய அம்சம்., ஆனால் லாபத்தை, சுயநலத்தை, குறுகிய மனப்பான்மையை மட்டுமேஇலட்சியமாய்க் கொண்ட சிலர் பலர் வாழவேண்டிய பூமிப்பந்தினை தன்னிஷ்டம்போலஉதைத்து விளையாடுவதும், நீர்லைகளை, காற்று மண்டலத்தை மாசுபடுத்துவதும் எதிர்க்கவியலா அள்வில் போவதை நம்மில் பலர் சாட்சிகளாய் ன்றுபார்த்து கொண்டுதானே இருக்கிறோம்.

'இயற்கை வளமும் சுற்றுச்சூழலும் மனிதகுல வளர்ச்சியின் முக்கியக் கூறுகளாக அமைந்துள்ளன. எந்த ஒரு வளர்ச்சிக்கான நடவடிக்கையும் அது செயல்படும் சுற்றுச்சூழலைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாவிடில் நீண்டநாட்களுக்கு நீடிக்க முடியாத ஒரு லைக்கே இட்டுச்செல்லும்'(5)

நெருக்கடி மிகுந்த இந்த தருணத்தில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் -என்ற அய்ம்பூதங்கள் குறித்து தமிழ்க் கவிஞர்களின் சூழலியல் குறித்த பதிவுகளை விரிவாய்க் காண்போம்.

நிலம்
நிலம்
'நமது நிலம் நமது ஆசிரியர்
நமது ஆசிரியர் நமக்குச் சொல்கிறார்:
நிலத்தை உழுவது எப்படி என்றும்
விதைப்பு செய்யும் முறை என்னவென்றும்
பிரார்த்தனை மூலம் மழையை வரவழைப்பது பற்றியும்
பயிர்களை கவனிக்கும் முறைகளையும்
கண்திருஷ்டியிலிருந்து காப்பாற்றுவது பற்றியும்
எப்போது,எப்படி அறுவடை செய்வது என்பது பற்றியும்
மகசூலைப் பகிர்ந்து கொள்வது பற்றியும்
நமது வயிற்றை நிரப்பிக் கொள்வது பற்றியும்'
......(6)

பசிய வயல்களும் நீண்டு நெடிதுயர்ந்த மரங்களும், பூத்துக் குலுங்கும் கொடி, செடி...தாவரங்களைத்தான் பூமி உருண்டையின்பிம்பம் நமக்கு பிள்ளைப் பருவம் முதல் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது.ஆனல் நிஜமென்ன..?விளைநிலங்கள் யாவும் வீட்டு மனைகளாக.. நகரங்கள், மாநகரங்களின் நீர்வழியடைத்து,கட்டடங்கள் முளைத்த கான்கிரீட் காடுகளாய் மாறிப்போயின. பறவைகள் அமர மரக்கிளைகளுக்குப் பதிலாய் ஆந்தெனா, டிஷ், செல்லுலார் கோபுரங்கள்' இப்படியொரு சிமெண்ட் சிறைக்குள் அகப்பட்டுத் தவிக்கும் கவிஞன் ஒருவனின் குரலிது:

"கட்டடங்களுக்கு நடுவே/ஒற்றை மலர்/எப்படி வரும் வண்ணத்துப்பூச்சி?"-ஆசுரா

ஒருமரம் சுமார் 17,50,000 மதிப்புள்ளபயனளிப்பதாக குறிப்பிடுகிறார்சூழல் ஆர்வலர் திரு.வின்சென்ட்.

மர(ண)ம்
குறிஞ்சியும் மருதமும் அழியவிரிகிறது பாலை அனல் பரப்பி...
சிநேகமான சுரபன்னை வனங்களை விழுங்கி
அடுக்ககங்களின் நிழல் பெருக்கியவர்களை
சீற்றத்துடன் தண்டித்தது ஆழிப்பேரலை
முள்தோப்பின் குயிலிசையை விரட்டியதுவெட்டுக்கத்தியின் ஓசை
மரம் வெட்டிய ஒருத்தனைத்தேடி அழித்தது
சிறப்புப்படை வனத்தொகுப்பை
தங்க நாற்கரங்கள் சீவித்தள்ளுகின்றனசாலையோரத் தருக்களை
வீழ்ந்த விருட்சங்களின் மீது கேலியாய்ப் படிகிறது
வேகவாகனங்களின் கருப்பு எச்சில்
அலட்சியத் தீப்பொறிதீயோவியம் தீட்டும் காற்று
சாம்பலாய் மலைவனம்
மரங்களை வெட்டிக் கொன்றுநீர்க்குழாய்ப் பதிப்பு
எப்படி வரும் மழை
தோப்புகள் மறைந்து விசுவரூப அடுக்ககங்கள்
வீட்டுக்குள் தொட்டி மரங்கள்
கேபிள் வயர்களில் மலர் தேடும்
தேன்சிட்டு மரங்களில்லா ஊரில்
ஓசோன் கிழிந்த உக்ரவெப்பம் காறித்துப்பும்
தருக்களை அழித்த உலகை
-அன்பாதவன்
(4)

மண்ணை மாசுபடுத்தும் நவீன எதிரிகளில் நெகிழி(பிளாசுடிக்) முதன்மையானது. மழைநீரை மண் உறிஞ்சவிடாமல் தடுப்பதோடு, மண்ணோடு செரிமானமும் ஆகாமல் நீண்டகாலத் தொந்திரவாய் நெகிழிகள். படிக்காதவர்கள், நாகரீகமில்லாதவர்கள் என 'மெத்தப்படித்தவர்களால்' முத்திரைக் குத்தப்பட்ட ஆதிவாசிகள் இயற்கையை மிகஎளிதாய், இலாவகமாய் இயல்பாய் புரிந்து வைத்திருப்பதைப் பாருங்கள்:

"எங்களது ஆடுகள் கானகங்களில் மேயப்போய்
மான்களோடு கலக்கின்றன
புலிகள் சிலவற்றை எடுத்துக் கொண்டுப் போய்விட
இதற்காக நாங்கள் புலிகளை வேட்டையாடுவதில்லை
ஏனெனில் அவற்றிற்கு என்றும் உரிமைகள் உள்ளன"(7)

இயற்கையின் சம உரிமையை நம்மில்பலரும் சரிவரப் புரிந்து கொள்ளாததாலேயே எதிர்விளைவுகளால் இன்னல் பட்டுக்கொண்டிருக்கிறோம். நெகிழிகளால், வேதியியல் கழிவுகளால், கான்கிரீட் சுமைகளால்நமது நிலங்கள் நாசமாகாமல் தடுக்க என்ன செய்திருக்கிறோம்?'ஆடுகளுக்குத் தழை, மேய்ப்பவருக்குப் பழம்'-எனத் தரும் இயற்கையை அழித்துவிட்டோமானால் யாருக்குமே எதுவுமே கிடைக்காமல் போய்விடும் அபாயத்தை புரிந்திருக்கிறோமா?"எழுகின்றன நூறு வினாக்கள்..

இந்த விளைவுகளுக்கு யார் காரணம்?
விடைகளாய் வருகின்றனசிலரின் அனுபவங்கள்
வேண்டுவதோ மழைநீர் அறுவடை
மக்கள் நிகழ்த்துவதோவிதைநீர் ப் படிகொலை"-(8)

-திட்டவட்டமாய்ச் சொல்லும் க்ருஷாங்கனியின் கவிதை காரணங்களாய் விரிய ,இரா.மீனட்சியோ ஒரு மருத்துவ அறிவுரை வழங்குகிறார்:

'மண்தாய்க்கு அவசரம்
தோல்மாற்று அறுவை சிகிச்சை'(8)

நீர்

நீருக்குத்தான் பூவுலகில் எத்தனை முகங்கள்! மழை, பனி, அருவி, நதி, கடல், ஏரி, குளம், கிணறு இப்படி தண்னீர் எடுக்கும் அவதாரங்கள் எத்தனை? இயற்கையோடு இனியதொரு தோழமைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்த நம் முன்னோர்கள் மிகவும் அருமையாக நீண்ட காலத் திட்டமிட்டு ஊர்களை, நகரங்களை நிர்மாணம் செய்தார்கள்.தாழ்வானப் பகுதிகளில் குளத்தையும்,வாய்க்காலையும் வெட்டினார்கள் நதி வெள்ளம் பொங்கி நாச நர்த்தனமாடினாலும் மனிதர்க்கு தொல்லையில்லாத வகையில் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன.கடலலைகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் வகையில் கரைக்கு மிகத்தள்ளி வீடுகள் அமைக்கப்பட்டன.ஆனல் இன்றைய நிலையென்ன..?குளத்தை, ஏரிகளை, நதிப்படுகைகளை தூர்த்துதான் பேருந்து நிலையங்கள்,அரசு அலுவலகங்கள்,குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்படுகின்றன. இதனால் நிலத்தடி நீர் சுழற்சி முறை பதிப்படைவதோடு பெருமழைக்காலங்களில் வெள்ளம் தன் அகன்ற அலைவாய்த்திறந்து மக்களை,உடைமைகளை ,உயிர்களை அள்ளி விழுங்குகிறது.

'வருஷந்தோறும் பொழிகிறது மழை
இடிந்து விழுகிற கட்டடங்கள்
சிதைந்த உடல்கள் பார்த்து
'உச்' கொட்டி பெருமூச்சு விட்டு
கடவுளை சபித்து நகர்கிறது
வேகமாய் மாநகர வாழ்வு'-

என்கிற அன்பாதவனின்வரிகளில் தெரியும் குரூர யதார்த்தம்தான் இன்றைய சூழல்.ஆனால் கருத்த மேகங்கள் கண் சிமிட்டி கலைந்து போய்விட்டால் இராம.பிரபு எழுதியதுதான் உண்மையாகி விடும்:

'சரியாய்த் தான் எழுதினான்
மாணவன்
பாழாறு'

மணல் லாரிக்காரர்கள் தினம் கொள்ளைக் கொண்டால் நதிகள் யாவுமே பாழாறு தானே!
(5)

திசம்பர் 2004-ல் கோரத்தாண்டவம் ஆடிப்போன ஆழிப்பேரலை குறித்தப் பதிவொன்று:'

'இன்னுமா அடங்கவில்லை இயற்கை அன்னையே உந்தன்பசி
பொறுமைக்கு உன்னைத்தான் பெருமையாய்ச் சொல்லிவந்தோம்
சீறிப் பொங்கிவந்து-இன்று பாரில் பழி சுமந்தாய்
கடலூர் கலங்குகின்றது;நாகை நடுங்குகின்றது
கன்னியாகுமரியோ கண்னீர் சிந்துகிறது
பாண்டி பதற,சென்னை சிதறுகிறது
இன்னுமா அடங்கவில்லை இயற்கை அன்னையே உந்தன்பசி'
(நடவு 12)

அசோகனின் வரிகளில் மனிதாபிமானம் மிளிர்ந்தாலும் இயற்கை சீற்றம் குறித்துமுன்னெச்செரிக்கைகள் தந்தும் காப்பாற்றிக் கொள்ளாத அலட்சிய மனிதருக்கு கடல் தந்த பெருந்தண்டனையோ சுனாமி! கடல் நீர் மாசுபடுவதைக் கூட அழகாய்ச் சொல்கிறது மித்ராவின் ஹைகூ:

கடல் நெடுக/மயிற்பீலிகள்/தூரத்தில் எந்திரப்படகு'

அதே நேரம் நதிநீர் இணைப்புகுறித்த சமூக உணர்வை பதிவு செய்கிறார் பெரணமல்லூர்சேகரன்:

"வீணாகும் ஆற்றுநீர்/தேனகும் இணைப்பால்/இணைப்போ கானல்நீர்'

எல்லாம் சரிதான்! எதார்த்தமென்று ஒன்றிருக்கிறதே...ஆர்.எஸ்.நாதனின் இந்தக்குரலைக்கேளுங்கள்.. உணர்வீர்கள்:

'மழை அழகுதான்/வீடு/ஒழுகாத வரை"

நெருப்பு

'தீ' குறித்த சூழலியல் சிந்தனையோடு தமிழ்க்கவிதைகள் பரவலாய்த் தென்படவில்லையென்பதோர் குறிப்பிடத்தக்க செய்தி.அதிகமாய்த் தீண்டினால் சுடுமென்பதாலா?அறிவியல் சிந்தனை சார்ந்த படைப்பாளி நெல்லை சு முத்து -வின் ஒரு மரபுக்கவிதைத்துண்டு 'வனத்தீ' குறித்து கவலைக்கொள்கிறது:

"காட்டுக்கே தீவைத்துக் கரி யெடுத்துக்
காற்றுக்கே கரியமில வாயும் கூட்டி
மோட்டுக்கு மேலாயாம் கதிர வன்தன்
மூச்சாகும் அனல்காற்றைப் புவிக்குள் தேக்கி
வீட்டுக்குள் நிம்மதியாய் உறை வதென்ற
விளையாட்டா? கண்ணாடி அறைவி ளைவால்*
நாட்டுக்கே அழிவுவரும்! ஞாலம் சாகும்
ஞாயிறொளித் தீவிரத்தில் ஊழி மாறும்"(9)
*(GREENHOUSE EFFECT)

இயற்கையோடு இசையும் எரியும் சோகத்தைப் பிழிகிறது மித்ரா-வின் இந்தக்கவிதை':

"காட்டுத்தீ மூங்கில்காடு/கண்ணில் நீர்/சங்கீதச் சாம்பல்"

" சுற்றுச்சூழல்கேடு காரணமாக உலகின் சூடு அதிகரித்து பல மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறோம்.பல்வேறு பனிப்பிரதேசங்கள் காணாமல் போய்விடுகின்றன. பல பகுதிகள் கடலுக்குள் அமிழத்தொடங்கிவிட்டன.பனிப்பிரதேசங்கள் உருகி இயற்கை காப்பு நிலை சிதைந்து வருகிறது.இந்த அபாயம் இமயமலையையும் தொட்டிவிட்டது"-என்கிற சுப்ரபாரதிமணியனின்(படைப்புமனம்)எச்சரிக்கைவரிகள் தீயாய்ச் சுடுபவை.

Share with others