Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

நீயும் பெண்தானே...

- துர்ரத் புஷ்ரா

நீயும் பெண்தானே...
--------------------------

அழகிய ரோஜாவே,
என்னால் உனக்கு வெட்கமா என்ன?
இன்று உன்னை காணவில்லை......?
நீ காதலின் மலராம்- நம்ப முடியாத சீவன்களின் கைக்கூலி......!
ரோஜாவே,
நீதான் மன ஆறுதல்,
வரண்ட இதயத்துக்கு குளிர்சி அளிப்பவள்- இருந்தும்
உன்னை ஏன் பறிக்கிறார்கள்?
நீ பெண்களைப்போல் உரிமை போராட்டம் செய்வதில்லையா?
உன்னை நான் காணவில்லை......??
உன்னை பறித்தவர் யார்?
இன்று உன்னை காணாமல் தவிக்கின்றேன்,
என் மனம் எரிகின்றது.
உன்னை காணும் தாகத்தால் என்னை கூட மறந்துவிட்டேன்.
நீ விருட்சத்தில் வித்தியாசமான அழகு,
உன்னை பறித்துவிட்டால்..,
நீ கண்ணீர் வடித்து நலிவடைகிறாய்..
இது அந்த பாவிகளுக்கு - கொள்ளை காரர்களுக்கு
ஏன் தானோ புரியவில்லை?
உன் முற்கவசங்கள் எங்கே?
அவைகட்கும் கைக்கூலி கிடைத்து விட்டதாமோ?
அழகிய செந்நிற ரோஜாவே,
வடிக்கின்றேன் கண்ணீரை நானும் இங்கே
உன்னைப்போல் ரொஜாவாய்....
பேசாமடந்தை நீ தானடி!
அப்பாவியும் நீதானடி!!
நீயும் ஒரு பெண்தானே!!!


-துர்ரத் புஷ்ரா
Durrath Bushra Annes.Srilanka
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-12-06


nasrifa

17 years 11 months ago

wow.nice poem.congratz.....& good luck

Durrath Pearl

12 years 8 months ago

நன்றி திரு.செ.பா.சிவராசன் அவர்களே... இறைவன் நாடினால் நானும் உங்கள் "வாகை"யில் வாகை சூட விரும்புகிறேன்...rnrnபரீட்சைகளின் போது வினாப்பத்திரங்களை நேரத்துக்கு முன் செய்து முடித்த பொழுதுகளில்தான் நான் அதிகமாக கவிதை இயற்றினேன்.. அப்போது என் கவிதைகள் இணயத்தளத்தில் பிரசுரிக்கப்படுமென நான் கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்கவில்லை.. என்னையும் ஒரு கவிஞர் ஆக்கி என் கவிதைகளை பிரசுரித்த வார்ப்புக்கு தான் என் நன்றிகளை முதலில் கூற வேண்டும்..வார்ப்பை எனக்கு அறிமுஅப் படுத்திய என் நண்பியான நஸ்ரிபா பாஇஸ் இற்குமென்நண்றிகளுரித்தாகட்டும்...rnrnவார்ப்பு வாழ்க...

Durrath Pearl

12 years 8 months ago

நன்றி திரு.செ.பா.சிவராசன் அவர்களே... இறைவன் நாடினால் நானும் உங்கள் "வாகை"யில் வாகை சூட விரும்புகிறேன்...rnrnபரீட்சைகளின் போது வினாப்பத்திரங்களை நேரத்துக்கு முன் செய்து முடித்த பொழுதுகளில்தான் நான் அதிகமாக கவிதை இயற்றினேன்.. அப்போது என் கவிதைகள் இணயத்தளத்தில் பிரசுரிக்கப்படுமென நான் கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்கவில்லை.. என்னையும் ஒரு கவிஞர் ஆக்கி என் கவிதைகளை பிரசுரித்த வார்ப்புக்கு தான் என் நன்றிகளை முதலில் கூற வேண்டும்..வார்ப்பை எனக்கு அறிமுஅப் படுத்திய என் நண்பியான நஸ்ரிபா பாஇஸ் இற்குமென்நண்றிகளுரித்தாகட்டும்...rnrnவார்ப்பு வாழ்க...rnrn-துர்ரத் புஷ்ரா அனஸ்rnஇலங்கை

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • அதுவும் ஒருநாள்
  • சின்ன காஷ்மீர்
  • மௌனத்தின் இரைச்சல்
  • காயங்களுடன் ஒரு கன்னி மனசு

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube