Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

தமிழ்பேசும்.. பே(தா)ய்நாடு.. பசி

- முனைவென்றி நா சுரேஷ்குமார்

தமிழ்பேசும் மனிதஜந்து!..பே(தா)ய்நாடு!!!.. பசி...

01.
தமிழ்பேசும் மனிதஜந்து!
--------------------------
குடிநீர் வராவிட்டாலும்
குடிநீர் வரி...
தொடர் மின்சாரத்தடை என்றாலும்
மின்சார வரி...
வாடகைவீடு என்றாலும்
வீட்டுவரி...
விலைவாசி ஏற்றத்தோடு
போராடும் அளவுக்கு
வருமானமில்லை என்றாலும்
வருமானவரி...
இருசக்கர வாகன
எரிபொருளின் விலைமட்டும்
உயர்வதைச் சமாளிக்க முடியாமல்
அவசரத்தேவைக்குமட்டும் பயன்படுத்த
சாலைவரி...
வறண்ட விவசாயவயல்மட்டுமே
சொத்து என்றாலும்
சொத்துவரி...

என வரிப்பணத்தையே
இலவசத் திட்டங்களாக்கி
சமுதாயத்தொண்டு
செய்வதாகச் சொல்லிக்கொண்டு
வாக்கு வங்கிகளை
பலப்படுத்தும்
ஊழல் ‘அம்மா’க்களையும்
பெருச்சாளி ‘ஐயா’க்களையும்
குண்டு வைத்துக் கொல்லத்
துணிவில்லாத கோழைகளாய்
தமிழகத்தில் வாழும்
தமிழ்பேசும் மனிதஜந்துக்களில்
நானும் ஒருவன்!!!!


02.
பே(தா)ய்நாடு!!!
-------------------

பணக்காரர்கள் பயன்படுத்தத்
தேவையே இல்லாத
பேருந்துகளை
அன்றாடம் பயன்படுத்துபவர்கள்
ஏழைஎளியவர்களும்
வசதி குறைந்த
நடுத்தர வர்க்கத்தினரும்
மட்டுமே..!!

இருக்கைகள் கிடைக்காவிட்டாலும்
இருகைகளின் உதவியோடு
நின்றபடியே பயணித்து
சேருமிடம் செல்லநினைக்கும்
அன்றாடங்காய்ச்சி எவனும்
சொகுசுப்பேருந்துகளையோ
குளிர்சாதனப்பேருந்துகளையோ
எதிர்பார்க்காத சூழலிலும்
உலக வரலாற்றிலேயே
பயணச்சீட்டுகளின் மூலம்
பகல்கொள்ளையடிக்கும்
வணிக(நிர்வாக)த்திறமை கொண்ட
போக்குவரத்துக்கழகம் அமைந்த
பெருமைமிக்க(?????????????)
எங்கள் பே(தா)ய்நாடு
இந்தியா தான்!!!!!



03.
பசி...
-------------
விளைநிலங்களெல்லாம்
விலைநிலங்களாகிப் போனதால்
சுவரொட்டிகளைக்
கிழித்துத் தின்று
பசியாறிக் கொள்கின்றன
எங்கள்ஊர்ப் பசுக்கள்...!!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-11-10


மன்னார் எம். ஷிபான்

15 years ago

நண்பரே! தங்களது மூன்று கவதைகளும் சமூக அவலங்களைப் பாடுபொருளாகக்கொண்டு சிறப்பாக அமைந்துள்ளன. அதிலும் மூன்றாவது கவிதை கையடக்கமாக கவித்துவமாக அமைந்துள்ளது. rnrnமன்னார் எம். ஷிபான்

முனைவென்றி நா …

14 years 11 months ago

நன்றி.

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • ஆசிரியர்கள்!..சோகம்..தாய்மை!
  • உழைப்பாளர்.. தாயென்பேன்.. எப்படி?
  • பிணம்!. .செருப்புத்தைக்கும்..அஞ்சல்
  • ஏழை..
  • குளம்படி சப்தங்கள்.. வீதிவழியே.. வெளிச்ச
  • பறவையின் சிறகசைப்பில்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube