Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

இறந்தவளின் புகைப்படம்

- நிந்தவூர் ஷிப்லி

இறந்தவளின் புகைப்படம்
-------------------------------

ஒரு இறந்தவளின் புகைப்படம் பற்றி சொல்வதற்கு
எவ்வளவோ இருக்கிறது..

சிரித்த முகத்துடன் எப்போதோ எடுக்கப்பட்ட
அப்புகைப்படத்தை நம் கைகள் ஏந்துகையில்
பூமியதிர்வை ஒத்த மன நடுக்கத்துடன் தடுமாறுகிறோம்..

பூமி விழுங்கிய அவள் கண்கள் நம்மை உற்றுப்பார்ப்பது
அத்தனை எளிதில் விளக்கக்கூடிய உணர்வு அன்று

அது ஒரு சிறு பெண்ணின் புகைப்படமாயின்
பரிதாபத்துடன் உற்று நோக்குகிறோம்
அது ஒரு இளம்பெண்ணின் புகைப்படமாயின்
இரண்டாம் முறையும் பார்க்கிறோம்
அது ஒரு வயதானவளாய்
சலனமேயின்றி நகர்கிறோம்..

இறந்தவளின் புகைப்படம்
நமக்குள் தோற்றுவிக்கும் ஏகாந்தம்
ஓரிரு நாட்கள் வரை நீடிக்கக்கூடும்..

எல்லாம் இருக்க
நாம் இறந்த பிறகு
நமது புகைப்படத்தை பார்க்கும் மனநிலை பற்றி
எப்போதாவது நீங்கள் சிந்திக்கிறீர்களா?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2011-07-03


எதிக்கா

15 years 4 months ago

"நாம் இறந்த பிறகுrnநமது புகைப்படத்தை பார்க்கும் மனநிலை பற்றிrnஎப்போதாவது நீங்கள் சிந்திக்கிறீர்களா?" rnrnநினைத்தாலே மரண பயம் பெருக்கெடுக்கிறது...யாருமே சிந்திப்பது இல்லைத்தான்...அப்படி சிந்தித்திருந்தால் எவ்வளவோ சிக்கல்களை எளிதாக தீர்த்துவிடலாம்...ஆணவம் தலைக்கெடுத்து ஆடுபவர்கள் அடங்கியும் போகக்கூடும்...

shan

15 years 4 months ago

புது புது இளம் கவிஞர்களை உருவாக்க உறுதுணை அளிக்கும் வார்ப்பு இணையதளத்திற்கு என் வாழ்த்துக்கள் .இது தொடர இறைவன் ஆசீர்வதிப்பார்.

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • ஏமாற்றங்களின் நெடும் பயணம்
  • இன்னொரு பிரிவை நோக்கி…….
  • நான் ஒரு காமுகன்
  • இந்த மெல்லிய இரவில்
  • யாரிடம் போய்ச்சொல்லி அழ..
  • அடக்குமுறை அறுத்தெறிவோம்
  • உன் போலில்லை.. முதிர்க்கன்னி
  • விலையேற்றமும் தடுமாற்றமும்
  • தொலைதூர அழுகுரல்
  • என் தேசத்தில் இது கிளையுதிர்காலம்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube