பூட்டு
---------
திரும்ப
வரும் வரை
திறக்கப்படாதென்ற
திறக்கும் முயற்சி
தோற்றாலும்
உடைக்கப்படாதென்ற
இருக்க முடியாது
இன்னொரு
பொருத்தமான சாவியென்ற
பாதுகாப்பின்
அடையாளமாகவே
பார்க்கப் படுமென்ற
நம்பிக்கையுடன்
ஒவ்வொரு
பூட்டிலும்
தொங்கிக் கொண்டிருக்கிறது
சந்தேகம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-10-19
பூட்டுகளுக்குள் சந்தேகம் தொங்கினாலும்
நம்பிக்கை என்ற ஒன்றில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். kalaisolai.blogspot.com
பூட்டுகளுக்குள் சந்தேகம் தொங்கினாலும்
நம்பிக்கை என்ற ஒன்றில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். http.//kalaisolai.blogspot.com
http://jomca.blogspot.com/