வெறுமையின் ஏக்கம்
----------------------------
அதிகாலையில்
தெருவோரத்தில்
கண் விழிக்காத
நாய்க்குட்டிகள்
தாயின் பால்காம்புகளில்
முட்டி,முட்டி
பால்குடித்துக்கொண்டும்
குட்டிகளை
நக்கி கொடுத்தபடியிருக்கும்
தாய்நாயை பார்த்து
ஆசையாய் ரசித்தபடி
கோலமிட
மனம் வராமல்
பெருமூச்சு கலந்த
ஏக்கமாய்
நடுவிரலால் அடிவயிற்றை
நிரடிப்பார்க்கிறாள்
மலடி.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-08-29
சில உணர்வுகளுக்கு வார்த்தை இல்லை என்றாலும்...
வெளிப்படுத்திதான் ஆக வேண்டியுள்ளது சொற்களால்.
அந்த சொற்களே கவிதைகளாக வரும் போது
உணர்வுகள் மற்றவர்கள் உள்ளத்தையும் காயப்படுத்திவிடுகின்றன.