Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

உன் போலில்லை.. முதிர்க்கன்னி

- நிந்தவூர் ஷிப்லி

உன் போலில்லை நான்.. முதிர்க்கன்னி



01.
உன் போலில்லை நான்
-----------------------------

என் முதுகுப்பக்கம்
செருகப்பட்ட
வாளின்
பிடியைச் சுமந்திருந்தது
உனது கைகளா..?

என்னை நோக்கி
ரண மழை
பொழிந்த மேகம்
உனது வானிலிருந்துதான்
வந்ததா?

இரவுகளில்
வலிக்க
வலிக்க
அழுதுகொண்டிருக்கும்
என் கண்ணீரின்
தீவிர ரசிகையா நீ…?

மனப்பரப்பில்
பிரளயம் செய்யும்
பூகம்ப அதிர்வுகள்
உன்னாலா நிகழ்கின்றன..?

நம்பவே முடியவில்லை

வளர்த்து விட்ட
பாகனையே
மதம் கொள்ளும் யானைகள்
கொல்லத்துணிவது போல
பின்னத்தொடங்கி விட்டாய்
எனக்கெதிரான
உன் சூழ்ச்சி வலைகளை..

உனது புன்னகைகளின்
பின்புலமாக
எனது
கண்ணீர்த்துளிகள்
இருக்குமாயின்
எனக்கொன்றுமில்லை
பொம்மையாகிறேன்
உனது கைகளில்…

காரணம்
உன் போலில்லை
நான்…..!



02.
முதிர்க்கன்னி
----------------

கனவுகளோடு
விடியும் காலை
கனவாகவே
இருண்டு போகிறது

மொழி பெயர்க்கப்படாத
துயர்களின் வெளியீடாக
கன்னமெங்கும் கண்ணீர்

புன்னகையின் விலாசத்தை
இன்னும் விசாரித்துக்
கொண்டுதான் இருக்கின்றன
என் உதடுகள்

நொறுங்கிப்போன
உணர்வுகளைச் சுமந்தபடி
புயலழித்த பூவனமாய்
கிழிகிறேன் நான்

நேற்று
வினாடிகளாய்க் கரைந்தன
ஆண்டுகள்
இன்று
ஆண்டுகளாய்க் கரைகின்றன
வினாடிகள்

மஞ்சள் கயிறு
இருக்க வேண்டிய இடத்தில்
கிளிஞ்சல் கயிறு

ஒழுகும் உயிரின்
ஒவ்வொரு துளியிலும்
உலர்ந்தபடி
நாதஸ்வரமும்
மேளதாளமும்

இனி
மணமுடிக்க
மனிதன் தேவையில்லை
மரணமே
நீ
இருக்கிறாய்

-நிந்தவூர் ஷிப்லி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-05-18


டீன்கபூர்

18 years 6 months ago

உங்கள் கவிதைகள் சிறப்பாகப் பேச முயற்சிக்கின்றன. வாழ்துக்கள்.

shibly591

18 years 6 months ago

நன்றி.உங்கள் விமர்சனம் எனக்கு நல்லதொரு ஊட்டச்சத்து போல உற்சாகம் தருகிறது.பலகோடி நன்றிகள் உரித்தாகுக.

su.siva

18 years 4 months ago

நன்றாக இருந்தது கவிதை.

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • ஏமாற்றங்களின் நெடும் பயணம்
  • இன்னொரு பிரிவை நோக்கி…….
  • நான் ஒரு காமுகன்
  • இந்த மெல்லிய இரவில்
  • யாரிடம் போய்ச்சொல்லி அழ..
  • அடக்குமுறை அறுத்தெறிவோம்
  • விலையேற்றமும் தடுமாற்றமும்
  • தொலைதூர அழுகுரல்
  • என் தேசத்தில் இது கிளையுதிர்காலம்
  • எனக்கு எத்தனை முகங்கள்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube