Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

உணவு

- கீதா ரங்கராஜன்

உணவு

குத்தி வைத்த நெல்லிலே
கிடைத்த ஆழாக்கு அரிசியும்
உலையில தான் கொதிக்குது
குச்சு வீட்டு குடிசையில்

கடைந்தெடுத்த வெண்ணெயில்
செய்த பருப்பு பாயசம்
ஊரு முழுக்க மணக்குது
மச்சு வீட்டு மாடியில்

ஆக்கி வைத்த சோற்றையே
எட்டு பாகம் ஆக்கிட
எத்தனம் தான் நடக்குது
குச்சு வீட்டு குடிசையில்

பத்து வகை பட்சனம்
வயிற்றுக்குள்ளெ ரொப்பிட
பிரயத்தனம் தான் நடக்குது
மச்சு வீட்டு மாடியில்

ஆழாக்கு சோறுமே
அரை நொடியில் மறைந்திட
ஈரத் துண்டும் காயுதே
ஏழை மக்கள் வயிற்றினில்

செய்த பாதி பண்டத்தை
உண்ண யாரும் இல்லையே
வீனாக கிடக்குதே
தெரு ஓர குப்பைத்தொட்டியில்

அரை வயிற்று கஞ்சி தான்
குடித்திருந்த போதிலும்
ஆனந்தமாய் தூக்கமும்
அரை நொடியில் வந்ததே

பலகாரம் பல உண்டு
வயிறடைத்து போனதால்
பஞ்சு மெத்தை சுகமிருந்தும்
உறங்க முடியவில்லையே

-- கீதா ரங்கராஜன்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-13


msmrishan

18 years 10 months ago

கவிதை மிக நன்றாக இருக்கிறது

Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • உயிர் மழை
  • முகங்கள்
  • கலைந்த கனவு
  • பிறவாத மகளுக்கு
  • நாளை உலகின் முடிவு

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube