ஓர் அறிமுகம் :

அழகாகவும், சுத்தமாகவும் முனைப்பு வெளியீடாக அர்த்தபுஷ்டியான அட்டைப் படத்துடன் வெளிவந்திருக்கிறது. இந்த 64 பக்கப் புத்தகத்தில் 32 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவை 1988 முதல் 1993 வரை இலங்கைப் பத்திரிகை, சஞ்சிகைகளில் ஏற்கனவே பிரசுரமானவை.

மனதைக் கவரும் வரிகள் சிலவற்றை டீன்கபூர் எழுதியிருக்கின்றார். சிலமாதிரிகள் :

-  அந்த இளமை நினைவுகள் மின்னுகின்ற பொழுதெல்லாம் முதுமையினை முட்டிக் கொள்ளும்.

-  ஒல்லிக்கேணி ஓரங்களில் உயர்ந்த பனைகள்.

-  மேட்டுவட்டைக் காணியில் மோப்பமிடும் குருவிகள்.

-  பெருமழையில் நனைந்து கோடிப்பக்கமாய் வந்து நிற்கும் கோழி மாதிரி.

-  நெருப்புத் தணல் கோட்டினால்போல் உடம்பு.

-  பாதைகளை எல்லாம் படுகுழியும் தண்ணீரும் உரிமை கொண்டாடும்.

-  கழுவாத குசினிபோல.

-  தளிரை முகர்ந்து போகும் மெலிந்த காற்று மட்டும்.

-  வறண்டு போய்க்கிடக்கும் பூமி வாய் திறந்திருக்கும் மழை நீர் குடிக்க.

-  பாலரைக் கண்டு கந்துகள் சவளும்.

-  செருப்பு சுரியைத் திண்ணும் என்றதனால்.

-  புன்சிரிப்பாய் நிற்கும் மரம்.

-  கடல் நீரில் கால் பதித்துவரும் காற்று.

-  வெயில் உமிழ்கிறாய்.

-  அரிசி கழுவிய நீரைப் போல.

இவ்வாறு சில பிரயோகங்களை டீன்கபூர் தருகிறார்.

'க்ளாக்சிக்கல்' எனப்படும் செந்நெறிக் கவிதைக்கு எதிர் வினையாக இங்கிலாந்துக் கவிஞர்கள் சிலர் 19ஆம் நூற்றாண்டிலே இயற்கையையொட்டிய கவிதைகளை எழுதி வந்தனர். அவர்களை 'ரொமான்டிக்' கவிஞர்கள் என்று விமர்சகர்கள் அழைத்தனர். அவர்களிற் சிலர் உவெல்லியம் உவேர்ட்ஸ்வர்த், பேர்ஸி பீ ஷெலி, ஜோண் கீட்ஸ், எஸ்.டி. கோலிரிட்ஸ், உவிலியம் ப்ளேக் ஆகியோராவர். அந்த ரொமான்டிக் கவிஞர்களை தமிழில் 'மனோரதியக்; கவிஞர்கள்' எனலாம்.

டீன்கபூரின் கவிதைகள் சில மனோரதியப் பாங்கில் அமைந்துள்ளன.

விமர்சகர்:
கே.எஸ். சிவகுமாரன்
இலங்கை வானொலியின் வான் பல்கலைக் கழகம்
வீரகேசரி வாரவெளியீடு.
06.08.1994

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-09 00:00
Share with others