தமிழில்: றஞ்சினி
இன்று
புதன்,13ம் திகதி.
நேரம் ஒன்று முப்பது,
இன்றுடன் முடிவு!
சமையலை நீயே செய்துகொள்
உனது உள்ளங்கிகளை
நீயே தோய்த்துக்கொள்
வீட்டைத்துப்பரவாக்கு,
கட்டிலை ஒழுங்கு செய்,
வீட்டைக்கழுவு,
ஜன்னலையும் மறந்துவிடாதே,
கிழமைக்கொருமுறை படிகளையும்.
சிலவேளை நடுநிசியிலும்
சிலவேளை வராமலும்
காலையில் வெளியேறி
மாலையில் நீ விரும்பியபடி
திரும்பும் உலகம் .
இன்னும் மூன்றுமுறை
கூரைமேல் சுற்றுகிறேன்.
புகைபோக்கி குளிராக உள்ளது.
நான் சுதந்திரம் அடைந்துவிட்டேன்.
Margret Gottlieb ஜெர்மன் மொழியிலிருந்து தமிழில் றஞ்சினி
நன்றி இருள்வெளி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-09 00:00