Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

அகதிகள்

- கோகுலன். ஈழம்.

அகதிகள்

அகதிகள்.
யார் இவர்கள்?
அலையின் சருகடிப்பில்
ஒதுக்கப்பட்ட கரை ஒதுங்கிகளா?

விதியால் எறியப்பட்ட
மிச்சத்துண்டுகளா?

உயிர் சுமந்த
பிணங்களா?

குளில் கால மரங்களாய்
இலை உலுப்பி
என்புகள் தெரிய
நிர்வாணக்கோலமிடும்
குழந்தை வயோதிபமா?

நடுக்கடல்......
கொள் கலன்......
உச்சிப்பனிமலை......

பாதி விழித்து
மீதி இறந்து
குற்றுயிராகி
நாடு கடந்து......

அன்னிய தேசத்து
ஆழ்துழை சிறைகளில்
நினைவுகளை கசக்கி கசக்கி
ஏதோ ஓர் மூலையில்
மொட்டை அடித்த பிண்டங்களாய்......

முகமறியா மூதாதையுடன்
சில வேளை கடவுளுடன்
காலம் கடத்தியும்
கடத்திக்கொண்டும்

குருதி உறிஞ்சிகளின்
ஊர்வலத்தில்
இன்னும்......

தேசம் கடந்தும்?
தேசத்திற்குள்ளும்?

ஏக்கப்பெரு மூச்சில்
இதயம் கனக்கிறது.

--கோகுலன்.
ஈழம்.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2007-12-02


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • அம்மா
  • என் தேசம்
  • பிஞ்சு வாழ்வு
  • எனக்கான இருப்பு……
  • முதிர் கன்னி
  • ஏழை வீட்டுச் செல்லம் நான்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube