உலகிற்கு வெளிச்சம் தரும்
காரணத்தால் மட்டும்
சூரியனின் வாதம் கேட்டு
சந்திரனை தண்டித்தல் நியாயமே ?

பூமிக்கும் மேகத்திற்கும்
நடக்கும் சண்டையில்
மழையைத் தண்டித்தல் நியாயமே ?

பூவின் வாதம் கேட்டு
தேன் திருடுவதாய்
வண்டை தண்டித்தால்
மகரந்த சேர்கை ஏது ?

உள்ளம் திருடியதாய்
காதலர்களைத் தண்டித்தால்
காதல் தான் ஏது ?

விதை திருடியதாய்
நிலத்தை தண்டித்தால்
மண்ணில் மரங்கள்தான் ஏது ?

மழைத்துளிகளைத் திருடுவதாய்
கடலைத் தண்டித்தால்
விலை உயர்ந்த முத்துக்கள் ஏது ?

வாயைத் திறந்து
உலகத்தைக் காட்ட
வெண்ணை திருடும்
மாயக் கண்ணனல்ல நான் !

கொடை வள்ளல் கர்ணனின்
புண்ணியத்தையும் திருட
பரந்தாமனல்ல நான் !

ஏவல் மட்டும் அல்ல
இடமும், பொருளும்
அறியாது பேசும்
பேச்சாளன் நான் !

நியாயம் பேசும் இடத்தில்
மெனமாய் நிற்கும்
நிராயுதபானி நான் !

என் நியாயத்தையும்
ஒரு முறை கேளுங்கள்
முடிவுகள் எடுக்கப்படும் முன்னர்...

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others