நித்திரையின் முன் உள்ள சில மணித்துளிகள்
நீண்டும் முதிர்ந்தும் !
சிந்தனை லயம் தேடலுக்குமிடையில்
மெல்லென முகிழும் என் மனக்கண் -
நினைவுகளின் சிதைவுகளை
அசைமீட்ட வண்ணம் !
என்னை நானே நானாகப் பார்க்கையில்
ஏனோ வாழ்வு கசந்தது !
(எனக்குள்) முகங்களை சற்றே மாற்ற முயல்தலில்
தோற்றே போக -
சிறுகச் சிறுக விரியும் எனதுலகம் -
சரி பிழை பார்த்து மீண்டும் மனிதனாய்
என்னைச் சிற்பமிட முயல்தலில் கண்ணயர்தல் கூடும் !
அதிரும் கடடிகாரம் - நிறுத்தி மெல்ல எழுகையில்
ஏனோ மறந்தே போகும் மனிதனாதல்
மீண்டும் ஓர் இரவிற்காய் . . . . . . .

பங்குனி 7-2002
கனடா

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others