- பாஷா
நான் இப்படித்தான்
சுவாரஸ்யமற்றுதான் போய்விட்டது
காற்றில் மகரந்தமில்லை
உனது வெறுப்பு
எனது வேர்களை
கருக்கிவிட்டது.
இதழ்கள் இழந்த ஒற்றை ரோஜாவாய்
காற்றில் ஆடி
கடைசிமுறையாக உன்
கருனணதுளி பருக காத்திருக்கிறேன்!
உன் தோழி,உன் மரப்பாச்சிபொம்மை
உன் கவிதையென
உனக்கு பிரியமானவைகளில்
உன்னையே கண்டேன்.
விட்டுவிடு என்றா சொன்னாய்
சொன்ன கணத்தில்
என் செல்களிலெல்லாம் பொதிந்த நீ
சிதறி போகிறாய்......
சிதறல் சேகரிப்பதில் சிந்தைபோகுதன்றி
சீ.....போ என்று உதறிப்போகுதில்லை
நான் இப்படித்தான்.............
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2005-01-01 00:00