அம்மா

ஒருவரிக் கவிதையாய்...
உச்சரிக்கும்போது
உயிரோட்டமாய்...
அன்பு,பாசம்,கருணை
அனைத்தும் அடக்கமாய்...
ஜனித்த உயிரெல்லாம்
ஒலிக்கும் முதல் சொல்லாய்...
வாழும் வார்த்தை எதுவென
எனக்குள் வினா விதைத்து
விடை தேட...
என் இதயக் கூட்டுக்குள்
உதயமானது....
"அம்மா" என!

- தீபம் கோபி , சிங்கப்பூர் -
(dewwinds@yahoo.com)

முணுமுணுப்பு

வரவுகள் கரைந்து
செலவுகள் சேர்ந்து
வருமானம் தொலைவது
வாடிக்கையானாலும்,
மாத இறுதியில்...
மனது மட்டும் மறவாமல்
முணுமுணுக்கும்....
அடுத்த மாதம் முதல்..
"சேமிக்க" வேண்டுமென...!

-தீபம் கோபி, சிங்கப்பூர்-
(dewwinds@yahoo.com)

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-21 00:00
Share with others