Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மீண்டும் பிறந்திருப்பேன்..! சரித்திரத்தின்

- எசேக்கியல் காளியப்பன்

மீண்டும் பிறந்திருப்பேன்..! சரித்திரத்தின் முதலெழுத்து

01.
மீண்டும் பிறந்திருப்பேன்..!
--------------------------------

உன்றன் அருகில் வந்தேன் – உனது
உணர்ச்சிக் காற்றேடுத்தேன்
இன்றும் வாழ்ந்திருப்பேன் –என்
இதயம் நன்றிசொலும்!

உன்முகம் அருகில் கண்டேன் – அது
உதிர்த்த பூக்கள் கொண்டேன்!
என்மனம் மணக்குதடீ –அங்கே
இன்றுமுன் பூசையடீ!

காந்த விழிகள் கண்டேன் ! –எனக்குள்
காயங்கள் ஆறுதடீ!
மாந்த அருகில்வந்தேன் –இதழ்கள்
மறுக்கப் பசித்திருப்பேன்!

சேர்ந்த கருங்கோந்தல்- எனக்குள்
சிலிர்ப்பைத் தந்தடீ!
நேர்ந்த கவிதைகளை –உலகும்
நித்தம் படிக்குதடீ!

மீந்த நாட்களிலே –உந்தன்
மெல்லிய நினைவுகளைச்
சோர்ந்தே விழும்வரைக்கும் –நெஞ்சில்
சுகமெனப் பூட்டிவைப்பேன்!

மீண்டும்,உன் நாள் வரவே –இறையை
வேண்டித் தவமிருப்பேன்!
மாண்டும்,அந் நினைவுகளில் –நான்
மறுபடிப் பிறந்திருப்பேன்!


02.
சரித்திரத்தின் முதலெழுத்து
------------------------------------

ஆதிரையில் வந்தவளே!
ஆண்டவனின் மறுவுருவே!
மார்கழியில் பிறந்தவளே!
மார்கொடுத்து வளர்த்தவளே!
தேர்ந்தெடுக்கா நற்பேறே!
தேவனவன் திருக்கொடையே!
பேர்கொடுத்து மகிழ்ந்தவளே!
பேறெனவே நெகிழ்ந்தவளே!
சோர்வுடனே தானிருந்தும்
சுகமெனக்கு விழைந்தவளே!
நீர்குடித்துப் பாற்சோறு
நிதமெனக்குத் தந்தவளே!
சீர்கொடுத்துச் சினந்தாங்கிச்
செய்தபிழை மறந்தவளே!
யார்கழித்துப் பேசிடினும்
எனைஉயர்த்தி நின்றவளே!
வேர்எனவே எனைப்பிடித்து
வெளித்தெரியா திருப்பவளே!
ஊர்தெரியச் சண்முகமாய்
உள்ளழுது வாழ்பவளே!
சார்ந்திருக்க மறுத்தவனின்
சரித்திரத்தின் முதலெழுத்தே!
தீர்ந்தெனது நாள்முடிந்து
தேவனிடம் சேருகையில்
நேர்ந்திடப்போம் தண்டனையை
நீகுறைக்க வேண்டம்மா!

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2013-01-01


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • புகழ்வழி நடப்போம்..இயற்கையுடன்..
  • ஒரு குடிமகனின் தீர்மானம்!..தமது முயற்சி
  • ஏழை நீயிது.. பிறப்பித்தாள்
  • தூற்றி உயர்.. கதை.. இனிக் கனவு
  • குழுக்களா.. கூட்டமு..நல்லறி..வெருவினார்
  • உண்மையின்..புலம்பி ஆகுமோ..ஆட்சி

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube