தூயவள்
-------------
தூயவள் எனக்கோர்
தூது விட்டாள்
கலந்தேன் காதலில்
காமுறவில்லை
என் வாசல் அழைத்து
வாழ்வளித்தேன்
வசந்த ஊஞ்சலில்
ஆடுகிறாள்
வஞ்சியிவள் சொந்தம் என்று
அந்தி நேரப் பொழுதெல்லாம்
யார் யாரோ இவளிடத்தில்
இதழோடு இதழ் சேர்த்து
இழந் தேன் மது அருந்தி
இன்ப ராகம் பாடுகிறார்
யார் இவர்கள்
நாலு கால் பந்தலிட்டு
நான் வைத்த மல்லிகையே
எத்தனை உறவுகள்
இறக்கை விரிக்கின்றன
உன்னிடத்தில்
மலர் செண்டாக நீ இருக்க
வண்டாக நான் இல்லையென
வருந்துகிறேன்
வெள்ளை மலரே – நீ
என்றும் தூயவளே
நானும்
உன் நாளாந்த காதலனே.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-08-18