- செந்தணல்
நம்பிக்கை ஒளி
நான் பறக்கத் துடிக்கிறேன்...
என்னால் முடியவில்லை.
என் கைகளும், கால்களும்
பிணைக்கப்பட்டு
சிரசிலே முள்முடி தா¤க்க
நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளேன்.
ஏன் முழச்சக்தியையும் திரட்டி
நான் பறக்கத் துடிக்கின்றேன்
ஏன்னால் முடியவில்லை.
ஓடுக்குமறைகள் என்
குரல்வளையை நெரிக்கின்றன.
மூடநம்பிக்கைகளோ என் மேனிமீது
பாம்புகளாய் நெளிகின்றன.
சாக்கடை நாற்றத்தை விஞ்சிய
துவாடை என் நாசிகளை
மூச்சு முட்ட முனைகின்றது.
--செந்தணல்
நன்றி: "எழுதாத உன் கவிதை"
தமிழீழப் பெண்களின் கவிதைகள்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00