பரம்பொருள் பார்த்தோமே.. காதலுற்றேன்..
01.
பரம்பொருள் பார்த்தோமே . . .
------------------------------
பாய்விரிப்பதைப் பற்றி பகர்வதே
பாவமெனப் பார்க்கும் பண்பாட்டில்
பாய்விரித்ததைப் பதிவுசெய்ய
பதுக்கிவைத்த பதிவுக்கருவியில்
பதிவுசெய்ததை
பலர் பார்க்கும் படக்கருவியில்
பலமுறை பலரோடு
பார்த்து பரவசமடைந்து
பரம்பொருள் பார்த்தோமே . . .
02.
காதலுற்றேன்..
----------------------
கருவுற்றபோதே காதலுற்றேனா ?
இல்லை . . .
காதலுற்றதால் கருவுற்றேனா ?
இல்லை . . .
ஈன்றவள் ஈந்ததோ ?
இல்லை . . .
தகப்பன் தந்ததோ ?
இல்லை . . .
உறவுகள் உணர்த்தியதோ ?
இல்லை . . .
உற்றார் உரைத்ததோ ?
இல்லை . . .
நட்புகள் நவின்றதோ ?
இல்லை . . .
பால்ய வயதின் பழக்கமோ ?
இல்லை . . .
பள்ளியில் பயின்றதோ ?
இல்லை . . .
பருவ வயதில் படர்ந்ததோ ?
இல்லை . . .
பல்கலையில் படித்ததோ ?
இல்லை . . .
பல பிறப்பில் பதிந்ததோ ?
பின் எப்போது காதலுற்றேன் ?
உன்னை கண்டவுடன் காதல் சொல்ல . . .
உன்னை கண்ட நாள் முதல் காதலுற்றேனா?
இல்லை நீ என்னைக் கண்ட நாளில் காதலுற்றேனா ?
காதல் இருந்ததால் காதலுற்றேனா ?
இல்லை . . .
உன் காதலால் காதலுற்றேனா ?
இல்லை . . .
என் காதலால் காதலுற்றேனா ?
நான் எப்போது காதலுற்றேன் ?
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-05-02