அவளின் விசனம்....
----------------------------
அவமானங்கள் அறுத்தெறியப்பட்டு
அங்கங்கள் பிரசுரிக்கப்பட்டுவிட்டன
வெட்டவெளியில் நீதிதேவதை
மடிந்து கிடக்கிறாள்
அப்பட்டமாக்கப்பட்ட பின்பு
ஏனோ?
மௌனமான மனம்....
வடிந்தொழுகும் குருதியின்
வாடை பகிர்ந்து கொண்ட
பின்பு மறைவிடத்தை எங்கு போய்
தேடுவது......?
- துர்கா
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-06-15