Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

நாயானவன்

- ஜதி

நாயானவன்
-----------------------

நான்கைந்து நாய்களுக்கு நடுவே
ஒரு நாயாகவே நானும் பிறந்தேன்

மற்ற நாய்களைப்போலவே
முத்தங்கள் பெற்று
மடிகளிலாடித்
தாவியபடியே
நானும் வளர்ந்தேன்

சொடுக்கொலியென்றால் ஓடிப்போகவும்
அதட்டுதலென்றால் ஓடிவரவும்
ஏவினவற்றை எடுத்துவரவும்
வாக்கிங் போகவும்
நானும் பழக்கப்படலானேன்

நாயானவன் நானென்று
புலரத் தொடங்கியபின்...
குரைத்துக் குரைத்துக்
குரைத்துக் குரைத்து...
பின் கடிக்க முற்பட்டபோதுதான்
விரட்டி விரட்டியடிக்கப்பட்டேன்...

பின்னொரு பசிநாளில்
நன்மதிய நேரத்தில்
பாதங்கள் தாரொழுக
எங்கோ ஓடிக்கொண்டேயிருக்கையில்தான்,
நாயானவன் நான் என்றால் - அது
நாய்களுக்கெல்லாம் இழுக்கென்று
எண்ணமிடலானேன்...

அக்கணத்தில்
இப்பிறவிப் பயனையடைந்து விட்டதுபோல்
தெருவோடே வீழ்ந்து
அவசரமாய் இறந்துபோனேன்
நாயாயிருக்கும்போதே


20090508
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-05-31


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • கடைசி கவிதை
  • நானொருவன் மட்டிலும்
  • மொழிதலால் வெளியிடாத..
  • புன்னகையிலிருந்து விடுதலை
  • நான் வீழ்வேனென நினைத்தாயோ
  • தவிப்பின் தீராத கணங்கள்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube