விபத்து.. காதல்.. வில்
விபத்து
--------------------
அபாய வளைவை
புருவங்களிலா வைப்பாய்!
அடிக்கடி விபத்தில்
சிக்கிக்கொள்கிறதே
என் கண்கள் .....
காதல்
-------------
நமக்குள் காதல்
வந்து விட்டது...
இனி,
நீ யும் நானும்
போய்த்தான் ஆகவேண்டும் ....
வில்
-------------
ராமன் வளைத்த வில்
ஒன்று என்கிறது சரித்திரம்...
இரண்டு என்கிறேன் நான்...
உன் புருவங்களைப் பார்த்துவிட்டு ...
-ராம்ப்ரசாத், சென்னை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2009-03-08