Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

மனச்சாட்சி மரணித்ததா?.. ஆதியும்..

- த.சு.மணியம்

மனச்சாட்சி மரணித்ததா?..ஆதியும் அகதியாய்


01.
மனச்சாட்சி மரணித்ததா?
------------------------------------------

தேடுகுது இரத்தமொன்று தெருவில் நின்று
தெரிந்தபடி போதையினில் மகனும் இங்கே
பாடுகுது தன்மகனின் நாமம் சொல்லி
பாவியுமோ நினைப்பதில்லை பாவம் எண்ணி

கூடுகுது வீட்டினிலே தினமும் கூட்டம்
குடித்தபடி பேசுவதோ சுடலை ஞானம்
வாடுகுது தண்ணியில்லாப் பயிரும் அங்கே
வாந்தி வந்து கொட்டுகிறான் மதுவாய் இங்கே.

நேற்றுவரை பேசிநின்றான் தெரிந்தே ஞானம்
நேசமுள்ள நாடெனவே குடித்தான் மோசம்
காற்றுவந்து சலசலத்துப் போகும் நாளும்
காணவில்லை பகலினினை இவனின் வாழ்வும்
ஊற்றுகின்ற தண்ணீரில் உரிமை காணும்
உன்னதமாம்,சொல்லுவதோ அவனின் வாயும்
நேற்றிருந்த அவன் வீட்டுக் கொட்டில் பேசும்
நேசமுள்ள தாய்மனத்தின் அவல வாழ்வும்.

நல்லமகன் காத்திடுவான் நினைவில் நாளும்
நம்பியவள் பார்த்திருந்தாள் தினமும் சோகம்
வல்லவனாய் வாழவைக்க உழைத்த ஊனும்
வலிமையற்றுப் போனதுதான் காணும் மீதம்
சொல்லுதற்கோ எண்ணுகிறாள் போகப் பாரம்
சொந்தமகன் என்பதனால் நாடும் மௌனம்
கொல்லுமவன் மனச்சாட்சி ஓர்நாள் என்றும்
கொள்கையுடன் காத்திருக்காள் தெருவில்
இன்றும்.




02.
ஆதியும் அகதியாய்...!
-------------------------------

பனி படர்ந்த பாறையுடன் காடும் மேடும்
பாதியது உயிர் துறக்க அவற்றைத் தாண்டி
தனித்தனியே இரவு பகல் முள்ளில் தூங்கி
தஞ்சமென பொருள் காவும் பெட்டியேறி
இனி வாழ்வும் இதற்குள்ளா முடியும் ஏங்கி
இறைவனது நல்லருளால் நாடும் கண்டு
குனியாத தலையுமது குனிந்து கூனி
குடிவரவும் கிடைக்கவென எதுதான் கோலம்.

பூசுகின்ற திருநீறால் புனிதர் காட்டி
புதியதொரு பெயர் தேட கோயில் கட்டி
வீசுகின்ற பக்தரவர் பணத்தையெல்லாம்
வித்தகங்கள் காட்டும் பல தர்மகர்த்தா
மாசுடைய செயல் தெரிந்தும் மடியில் போட
மாற்றுவழி ஏதறியா பக்தர் ஏங்க
தேசுடைய கடவுளுமோ நீதி மன்றில்
தேங்கியவர் அழுதபடி நிற்கும் கோலம்.

சாமியுமோ அகதியென மனுக்கொடுத்து
சங்கதிகள் ஏதறியா மன்றில் நிற்க
பூமியிலே தாம் புனிதர் எனவும் சொல்லி
புதுப்புதிதாய் அறிக்கைகளும் இதழ்கள் காவ
பினாமிகளும் வகை தொகையாய் நாளும் கூட
பிறந்துவிடும் கோயில் பல வீதிதோறும்
சுனாமியது உங்களையேன் தேடவில்லை
சுற்றியது அழித்திருப்பின் இதுவேன் கோலம்.

-த.சு.மணியம்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-06-01


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • எட்டில் சனி
  • எரிப்பேன் எள்ளு...
  • வேதம் புதிது...!
  • ஞான சூனியம்
  • போதுமடா சாமி...
  • தேடல் வலி...!
  • போதுமடா சாமி...2
  • சுடலை ஞானம்
  • இவர்கள் புனிதர்கள்
  • பெண்ணே யாருனைத் தடுத்தது?
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube