காணவில்லை
பாண்டித்துரை
என் வீட்டு ஜன்னலில்
வானத்தை காணவில்லை
எதிர்பட்டவை எல்லாம்
தூக்குமாட்டி தொங்கும்
வட்டுடைகளும்
வர்ணம் இழந்த ஜட்டிகளுமே..
------------------------------------------
வே(ர்)றெங்கோ
பாண்டித்துரை
இலை
உதிர்கிறது
காற்றிடம்
கொண்ட கலவியிலே
கசங்கிப் போயிருக்கவேண்டும்
அங்கும்
இங்கும் ஓடி
மண்ணிலே மக்குகிறது
வளர்த்த மரம்விடுத்து
வே(ர்)றெங்கோ
கவி ஆக்கம்: பாண்டித்துரை
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-12-05