தராசுத்தட்டில் . . .
நகைச்சுவையாய் நாலுவரி
பேசியிருப்போம்
அதற்குள் காதல் எப்படி வந்தது ?
உறவு என்பதனால் உன்னுடன் நான்
கொஞ்சம் உரிமை அதிகம் எடுத்துவிட்டேன்
அது காதல் வானத்தினில்
பறக்க வைத்தததுவோ ?
வெந்துபோயிருந்த என் உள்ளத்திற்கு
மயிலிறகால் வருடின உன் வார்த்தைகள்
துவண்டிருந்த என்னை
துடிப்பாக மாற்றின உன் வரிகள் - நான்
புதிதாய் பிறந்தேன் அன்பே
உனக்காய் என்னை மாற்றிக்கொண்டே
நாம் இணைவோம் என்பது
எனக்கு இன்னும் உறுதி இல்லை
அதனால்தான் நிழலில் இணைத்துக்கொண்டேன்
நிழல் இணைந்துவிட்டால் இனி
நிஐம் இணைவதை யாரும் தடுக்கமுடியாது
அலைபாய்கின்றது உள்ளம்
அதன் கட்டுத்தறி பொட்டித்தெறித்ததாலோ
இரு கரங்களில் பல சொந்தங்கள்
தராசின் ஒரு தட்டில் நீ
மறுதட்டில் இரத்த உறவு
அதுவா இதுவா என
புரிந்துகொள்ள முடியவில்லை
ஓன்றை இழந்தால்
இன்னொன்று கிடைக்கும்
எதை இழப்பது
பாலு£ட்டி சீராட்டி
பக்கத்தில் இருந்த பசியாற்றி
ஆயிரம் கதைகள் சொல்லி
அன்பால் என்னை மெழுகி
இன்றுவரை எனக்காக இருப்பவர்களையா ?
அரைநொடியில் என்னை அசைத்துவிட்டு
எனக்குள்ளே இறங்கிசென்ற
ஏதொவொரு புரியாத உணர்வை
விதைத்த உன்னையா ?
பதில் சொல் . .
எது பொ¤தென்று எனக்குத்தொ¤யவில்லை
இரண்டு கண்களில் ஒன்றைக்கேட்டால்
எதை சொல்வது
இதயம் ஓன்றுதானே
அதை இரட்டையாக்குவது எப்படி ?
இன்னமும் என் தராசுத்தட்டு
சமனாகவே.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2004-11-07