காயத்தில் காயம்
---------------------------
சீ என்று ஒதுக்கியது
காயம் பட்டபோது
தீக்காயம் வீரியம் புரிகிறது
இப்பொழுது
செங்காந்தாள் கைகள்
கருஞ்சாம்பல் ஆனது
திருமுகத்தில் தீவடு பட்டு
திருமணம் ஆகாத தங்கை
திருவள்ளுவருக்கு இல்லை போலும்
தீயினால் சுட்ட வடு உள்ளாறும் என்றாரே
குளிரூட்டப்பட்ட பேருந்தில்
உயிரோடு தகனம் செய்யப்பட்டது
குடைந்தையில்
பள்ளிச்சாலைகள் குழந்தைகளுக்கு
கொள்ளிச்சாலைகள் ஆனது
மருத்துவ அறைகள்
பிணவறைகளாய் மாறியது
செய்திகளாக செறிக்கமுடியாமல்
காட்சிகளாகி கண்களில் ஓடுகிறது
கருகிய கைகைளை பார்க்கும்
ஓவ்வொரு முறையும்
கருகுகிறது மனது ...
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-01-25