Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

பொறுமை கொள்!

- சி. கலைவாணி,வேலூர்

பொறுமை கொள்!
-------------------------

பெண்ணே!
பகலிரவாய் படித்து
பற்பல தேர்வுகள் எழுதி
பல்கலைக் கழகத்திலும் நீ
பார்க்கமுடியாத பட்டங்களை...
இல்லற வாழ்க்கை உனக்கு
இலவசமாய் வழங்குகிறது!
கணவன் ஏச்சுக்களில்தான் எத்தனை
கணக்கற்ற பட்டங்கள்!
கழுதையென்றும், கழிசடையென்றும்
கௌரவப் பட்டங்கள்!
மாமியாரின் வசைகளிலோ
மகத்தான விருதுகள்!

சண்டாளியென்றும் சாகசக்காரியென்றும்
கொண்டவனைக் கைக்குள் போட்டு
குடிகெடுக்க வந்தவளென்றும்
தலையணை மந்திரம் ஓதி
தனிக்குடித்தனம் செல்பவளென்றும்
தாளமுடியா வசவுகள்,
மீளமுடியா துயரங்கள்!

பூமித்தாய்க்கு நிகராக
பொறுமைதனைக் கொண்டோர்
பூவையரென்று உரைக்கும்
பொன்மொழியை நினைவுகொள்!
பத்து மாதங்கள் சுமந்து நீ
பெற்றெடுக்கும் மகவு உன்னை
“அம்மா!” என்றழைக்கும் அப்பட்டம் உன்னை
அகமகிழச் செய்யும் வரை!
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2012-01-19


ROUTHIRAN

14 years 8 months ago

வேலூர் கலைவாணி அவர்களே!rnஉங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.rnசிந்தனையின் தெளிவு கருத்திலும் இருக்கிறது.rnஉங்கள் கவிதைக்கான பாராட்டைrnஎனது கவிதை வரிகளைக் கொண்டே முடிக்கிறேன்.rnrn"எம் சீதைகளுக்குrnஅயோத்திகளே அல்லவாrnஅசோகவனங்களாய்rnஆகிவிட்டன..."(கவிதை-நவீன சீதைகள்)rnrn -ரௌத்திரன்

Join the Vaarppu Community

Log In Register

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube