Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

விடிவு தருவாளா?

- கிரிகாசன்

விடிவு தருவாளா?
---------------------
(ஒரு ஈழமகனின் கேள்வி)

வெள்ளி நிலவொளியும் விரி நீர் தடாகத்து
துள்ளும் அலையழகும் தூரத்து வானமதில்
மெல்ல அசைந்துவரும் மேகங்களும் கண்டே,நம்
உள்ளம் சிலிர்க்குமோர் உதயத்து வேளையிலே

கோவில் மணியொலிக்க கூவிஒலி சங்கெழுப்ப
வேதியரின் பூசையொலி விண்பரவும் காலையிலே
வாசல் திறந்து ஒரு வஞ்சிமகள் நின்றிருந்தாள்.
'ஆநீ..யார்' என்றேன் அவள் சிரித்து எனைப் பார்த்தாள்.

'போனது ஓர்வருடம்! புத்தாண்டு நான்' என்றாள்
'புதியதொரு ஆண்டின் புலர்வுஇது நாள்' என்றாள்
"ஆகட்டும் என்ன! அழிந்தவைகள் ஆயிரமாம்,
நீமட்டும் என்ன, நிம்மதியைத் தருபவளோ!"

என்றேன் எனைப்பார்த்து இளமுறுவல் கொண்டே,'பார்
சென்ற வருடத்தாள் சென்றுவிட்டாள், செய்தவைகள்
இன்று முதல் நிறுத்தி இன்னல் துடைக்கவென
வந்தேன் நான், விக்ருதி வருடம்' என்பெயர் என்றாள்

'இல்லை இனி உனக்கு இழிதுயரம் தொல் நீக்கி
வெல்லத் தமிழ்வாழ விடியல் தர வந்தேன்நான்
பொல்லாப் பகை முடித்து புது வாழ்வு கொள்வீர்நீர்
நில்லாத் துயர் ஓடும் நிச்சயமே காண்!' என்றாள்.

நம்பி அவள் பேச்சில் நான் அமைதி கண்டேன் ஓர்
வெம்பும் தமிழ் குலத்தின் விடுதலைக்கு வழிகோலி
புத்தாண்டுப் பொன்மகளாள் புதுவீரம் தருவாளோ..?
செத்தாலும் கண்மூடி திசைபாராதிருப்பாளோ..????


பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-05-02


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • ஏனிந்த வஞ்சனை.. படைகள் இல்லாத
  • ஈழ மண்ணில் ஓர் ஊழித் தாண்டவம்
  • அழும்வரை சிரிப்பேன்.. காதல் ஏக்கம்
  • நீல வானில்.. ஏன் படைத்தான் எம்மை?
  • நீதி கேட்ட தேவதை..
  • செய்வதென்ன? கூறு!.. சலசலப்பு
  • கலவரமா?.. இயற்கையும்.. கல்லாக இரு
  • எழில் கொஞ்சும்.. நெஞ்சில்.. பிரிவின்
  • இனியொரு பிறவி.. முத்துத்தமிழ்
  • எண்ணத்.. விடியலை..என்ன..வாழ்க்கை
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube