Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

இரவினில் பேசுகிறேன்

- மன்னார் அமுதன்

இரவினில் பேசுகிறேன்
---------------------------

ஒன்றாய் நூறாய்ப்
பல்கிப் பெருகி
புதிய கட்டுரையாய்
எனக்கே எதிரொலிக்கும்
பகலில் பேசிய
ஓரிரு வார்த்தைகளும்

மானிட அரிதார
மாக்களின் சர்ச்சையில்
மெளன விரதமாய்க்
கழியுமென் பகல்கள்

தோழிக்கும், தோழனுக்கும்
துரோகிக்கும், காதலிக்குமாய்
எத்தனைமுறை உரைத்துக் காட்டுவேன்
நான் அவனே தானென

பகல்களில் செத்து
உறக்கத்தில் உயிப்பதற்கே
இரவினை நாடுகின்றேன்

எண்ணச் சிதறல்கள்
ஒலியாய் வெடிக்க
விழித்துக் கொள்கின்றன
என் இரவுகள்

எங்கோ பார்த்த முகத்தோடும்
அதே கனிவோடும்
அதட்டல் தொனியோடும்

வெளிச்சத்தில் வீசிய
வார்த்தைகள் எல்லாம்
இருட்டில் மோதி
அவளிதழில் எதிரொலிக்க
ஏகாந்தத்தில் சுற்றித் திரிகிறேன்

உணர்ந்த ஸ்பரிசமாய்
அவளணைக்கையில்
இராக்கோழியை சேவல் எழுப்பும்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2010-01-01


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • இலங்கை மண்ணிற்கொரு கடிதம்
  • இது தான் காதலோ?
  • கொஞ்சம் கூதல்... நிறையக் காதல்
  • ஊரறியும்... இதோ இன்னொரு கிறிஸ்து
  • தோழமைக்கு வலிமையெது?
  • ஜனநாயக அடிமை.. வெல்லத் தமிழினி
  • உன் நினைவோடு.. அவளும் எச்சிலிலை
  • களம் தேடும் விதைகள்
  • நாற்காலிச் சண்டை.. கரைகளுக்கப்பால்
  • இலக்கியவாதி அருள் மா.இராஜேந்திரன்
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube