Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

வரம் வேண்டும் தாயே

- சாந்தினி வரதராஐன்

கருவினிலே எனை சுமந்து கண்போல் காத்தவளே
உருவாய் எனை இவ்வுலகிற்கு அளித்தவளே
உறவுகள் ஆயிரம் உடனிருந்தும் என்ன
உனைப்போல் ஓர் தெய்வம்
இவ்வுலகில் உண்டோ ?

இமைகளை நனைத்து இறங்கும் கண்ணீரில்
சுமைகள் கரையவில்லை உன் சுகமும் எனக்கில்லை
கனவில் கூட நீ வருவதில்லை
காத்திருப்பில் காலயெல்லையுமில்லை

சுகமாய் உன் மடிசாய்ந்து துயரணைத்தும் நீ கேட்க
ஓருமுறை நான் அழவேண்டும் அதற்காய் ஒரு வரம் வேண்டும்
மண்ணிடையில் உயிர்த்தெழுந்து மரமதனை பிடித்து நின்ற
என் அன்னையே எங்கு சென்றாய் ?
ஏன் என்னை பிரிந்து சென்றாய் ?

உனைவிட்டு வெகுதூரம் விலகிப்போன மகள் - இனி
எந்தப்பிறப்பெடுத்து உன்னருகே வந்தமர்வள் ?
எனைத்தொட்டு தழுவி என் கண்ணீர் துடைப்பதற்கு
என்று வருவாய் நீ ?
ஏன் விலகி சென்றாய் அம்மா ?

என்னை தினம்தேடி ஏங்கி வழிபார்த்த -உன்
சின்ன விழியிரண்டை யார் மூடி து£ங்கவைத்தார் ?
கன்னம்கரிய இருள் காவலுக்கு துணை நிற்க
உன்னை எரித்தனரோ ?
அந்த தீவந்து உனை அணைத்ததுவோ ?

தூரத்தொடு வானம் எனை கரம் நீட்டி அழைத்ததனால்
தூர விலகி வந்தேன் உன் நினைவைமட்டும் சுமந்துவந்தேன்
ஆளக்கடல் கடந்து ஓராயிரம் மைல்நடந்து
வேரிடைவிட்டகன்ற விருட்சமாய் நான்வாழ
வேண்டியதென்னவென்று இன்னும் விளங்கவேயில்லையம்மா.

மானுடம் மையம்கொண்ட வசதிகள் கிடைத்துமென்ன - இப்
பொய்யான உலகினிலே புகழுடன் வாழ்ந்துமென்ன
எனக்காய் மெய்யுருகி எனைவளர்த்த அன்னையவள்
பொன் முகத்தை காணமல் இப்புவிதனிலே வாழ்வது ஏன் ?

சாந்தினி வரதராஐன்.
ஜேர்மனி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • மழைக்கு தெரியாது
  • நிழல் தேடும் மரங்கள்

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube