Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

நீ நிழலாய்ப் படரும் வெளிச்சம் !

- எம்.ரிஷான் ஷெரீப்

நீ நிழலாய்ப் படரும் வெளிச்சம் !

விடிகாலைத் தூக்கம்,
மழைநேரத் தேனீர்,
பிடித்த செடியின் புதுமொட்டு,
புதுப்புத்தகக் காகிதவாசனை,
இமைதடவும் மயிலிறகு
மேலுரசிடச் சிலிர்க்கும்
ரோமமெனச் சுகமாய்
எனை ஏதும் செய்யவிடாமல்
நீ வந்து நிரப்புகிறாய்
எனதான பொழுதுகளை !

மூங்கில்களுரசிடக்
குழலிசை கேட்குமோ...?
உன் மொழியில்
தினம்தினமொரு இசை
எனைக்கேட்கச் செய்கிறாய் !

புருவம் தடவப் பூஞ்சிரிப்பு
தெற்றுப் பல்காட்டி மின்னும் ;
சிவந்த அழகுக் கன்னமென்
அழுத்தமான முத்தத்தில்
நிறம் மாறி நீலம்பூக்கும் !

விழிகளிரண்டும் மின்மினிப்பூச்சிகளென
விழித்திருந்து அலைபாய
என் தூக்கம் கரைத்துக்குடித்து
நீ புதிதாய் தினம் வளர்வாய் ;
உன்னிமையில் துயில் வளர்க்க
என் பொறுமை சோதிப்பாய் !

எனைப்பெற்றவளின் சுவாசங்களையும்
அத்தனை பதற்றங்களையும்
நானறியச் செய்தாயென்
பிரசவத்தின் இறுதிக்கணங்களில்
நீ வந்து அழுதாய் ;
நான் வலி நிறுத்திப் புன்னகைக்க...!

-- எம். ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
----------------------------------
M.Rishan Shareef,
Hemmathagama road,
Mawanella,
Srilanka.

msmrishan@gmail.com
www.mrishanshareef.blogspot.com
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-02-03


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • ஒரு வண்ணத்துப் பூச்சியின் பாடல்
  • தலைநகரத் துயரக்குறிப்பு
  • இதயங்கள் தேவை !
  • பேய் மழை ...!
  • பத்து விழிகள் !
  • ஒரு கணப் பொழுதில்...!
  • தீயெனத் தனிமை சுட ...!
  • சுனாமியழித்த சினேகிதனுக்கு...!
  • தடங்களழியும் பொழுதிலுன் நேசம் ...!
  • மனவெடிப்பிலுன் தடம்பதித்து...!
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube