Skip to main content
Home
Vaarppu
A Tamil poetry magazine

Main navigation

  • கவிஞர்கள்
  • கவிதைகள்
  • விமர்சனங்கள்
  • நேர்காணல்கள்
  • கட்டுரைகள்
User account menu
  • Log in

Breadcrumb

  1. Home

குளிர்ச்சியின் காதல்... மரங்கொத்தி...

- டீன்கபூர்

குளிர்ச்சியின் காதல்... மரங்கொத்தி...

1.குளிர்ச்சியின் காதல்

அசைத்துப் பார்த்தேன்
கயிற்றால் கட்டிய காற்று
உறுமிப் பார்த்தேன்
சுடரால் பிணைந்த சூரியன்
கொழுவிப் பார்த்தேன்

மொட்டால் மெழுகிய மலர்.

விரல் நுனிவரை உண்மை உரைத்தது
பிரண்டு மடியாத நா
என்னில் வளர்த்த மூச்சு பிணத்தோடு சேரும் வரை

கருவாடு நெருப்போடு வேவி
உள்ளம் குளிர்ந்தது
காலை உயர்த்தி தலைமேல் பதித்து
நடக்கத் தொடங்கிய கர்வம்

ஓயாத அலையில் குளித்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு ஆண் அலையேனும் அழைக்க
இந்தப் பன்னல்கள்
என்னைத் தூக்கி நுரையில் தள்ளட்டும்

காக்கை ஒரு மிரடு குடித்தது
என் அழுகையின் நீரை
பசிதீர்ந்ததோ.
பாசச் சள்ளிகளை நிறைத்து கட்டிய கூடு
யாரும் கலைக்காது
உயரத்தில் மனிதவாடை வீசாது காணும்
இவனும்….


2.மரங்கொத்தி வரலாம் இனி

தென்னையைப் போல வெறும் ஈர்க்குக் குடல்…
இவனிலிருந்து வராது
இதயம், ஈரல், குடலோடு சேர்ந்த உறுப்புக்கள்
உன் சொண்டில் வரும்
நரம்புகளும் அதில் சிக்கும்.
உலாவப் பிறந்தவன் மனிதன்
தென்றலை உடலுக்குள் குடில் கட்டிக் கொடுப்பவன்
இயற்கையை கண்ணுக்கு விருந்தாளியாய் அழைப்பவன்
ஆயினும் இவன் ஓரிடத்தில் நின்று
வளரும் மரம் போல நகராமல்
அடியைப் பதி;க்கவும் அஞ்சிக்கிடக்கின்றான்
தன் கிராமத்து வேரை இறுகப்பிடித்தபடி.

கடல் சார்ந்த இடம்
வயல் சார்ந்த இடம்
யுத்தம் மேய்கின்ற பூமியாகக் கிடக்கின்றது.

மொத்தத்தில் இவன் ஜடம்
மரங்கொத்திக் குருவியே நீ வரலாம்
கண்ணிகள் இவனில் புதைக்கப்படவில்லை
தென்னையைக் கொத்திக் காயப்படுத்தி
அதன் உடம்பில் ஓவியம் வரைந்து
‘போர்’ ஒன்றைச் செய்து
இல்லறம் நடத்திய போதும் குருவி….

மரங்கொத்திக் குருவியே நீ வரலாம்
நம்பி
துப்பாக்கி உன்னை நோக்கி இல்லை
இவன் உடம்பில் வந்து தங்கு
தோளில் நின்று எச்சில் அடி…
ஒரு போரை வடிவமைக்க
இவன் நெஞ்சிலோ
முதுகிலோ நின்று கொத்து
மரமான இம்மனிதனின்.

-- டீன்கபூர்
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-01-27


Join the Vaarppu Community

Log In Register

இவரின் பிற கவிதைகள்'

  • எனது பாத்திரம் இதுவாகி
  • நான் திறந்துவிடப்பட்ட சாளரம்
  • கனவின் துண்டு
  • எனக்காகவே ஓர் எறும்பு
  • ஒட்டிக்கிழங்குக்காரி
  • அந்தி வேளை... கள்ளன்...
  • எங்கே என்... கலர்ப் பாம்பு...
  • தேர்தலில் குதியாத வேட்பாளனாக
  • நினைவும் இன்னொன்றும்
  • நிலத்துண்டு..ஒவ்வொரு.. காற்று..புதிய பூ
- மேலும்..

புதிய கவிதைகள்

  • இது என் முதல் கொலை.. சாதி மறு
    - வித்யாசாகர்
  • பூனையாகிய நான்…
    - தக்‌ஷிலா
  • ஆகாயம் ஆன்மாவைக் காத்திருக்கும் இரவு
    - எம்.ரிஷான் ஷெரீப்
  • இயைந்த நிலை
    - மௌனன்
  • இளம் விதவையின் சோகம் ...வெயிலோடு
    - சொ.சாந்தி
  • விடைகொடல்
    - ரவி (சுவிஸ்)
  • உன் வரவும் என் மரணமும்..அமைதி
    - மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
  • கண்ணீர் துளிகள்
    - ச இரவிச்சந்திரன்
  • குறிப்பேட்டிலிருந்து.. நான் கழுதையாகி
    - மன்னார் அமுதன்
  • எமைப்பார்த்து.. நிற்கிறார் நிலைத்து
    - எம் . ஜெயராமசர்மா
  • ஆத்மாவின் ஒப்பாரி
    - இரா.சி. சுந்தரமயில்
  • சின்ன மகளின் செல்(லா)லக் கனவுகள்
    - த.எலிசபெத், இலங்கை
  • எப்போது என் கோபத்தைக் காட்டுவது?
    - முல்லை அமுதன்
  • யாமிருக்கப் பயமேன்.. மூன்றெழுத்து
    - கலாநிதி தனபாலன்
  • எழுத்துக்கள் இல்லாத புத்தகம்
    - முகில்
  • மராமரங்கள்
    - ருத்ரா
  • வலி நிறைத்துப்போன... வெறுமை
    - அக்மல் ஜஹான்
  • சிலுவை சுமக்கும்... தப்புக்கணக்கு
    - இனியவன்
  • வால் மட்டும்
    - ருத்ரா
  • வைகாசி வலி
    - வதனிநேசன்

Footer

  • கருத்துகள்
  • நூலகம்
  • படமும் வரிகளும்
  • மொழிபெயர்ப்புக் கவிதைகள்
  • Privacy policy
  • Cookie Policy
  • Terms of Use
  • எம்மைப்பற்றி
  • வாசல்
இன்றுவரை 2,867 கவிதைகள் | 671 கவிஞர்கள்
யாதும் ஊரே யாவரும் கேளிர்
© Vaarppu.com, 1998 - 2026. Powered by ExcelGra

Follow us on
Facebook | X | YouTube