சாதி கலவரம்
கேட்பாரற்று கிடக்கிறது
மனிதநேயம்.
0

இந்து முசுலீம் கிறித்து
கீழ்சாதி மேல்சாதி..செருப்பு
பிணம்.
0

தமிழன் தான்
தமிழனிடம்
“ஹலோ“
0

தேர்தல் காலம்
கையில்மட்டுமா முகத்திலும்
மை.
0

நானே பரவாயில்லை
கழுதை சிரிக்கிறது
ஆங்கிலப்பள்ளி செல்லும் குழந்தை.
0

குறிப்பு::

விரைவில் வெளிவரவிருக்கும் “மழை ஓய்ந்த நேரம்“ தொகுப்பிலிருந்து கவிதைகளை அனுப்பியமைக்கு கவிஞருக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others