- இ.இசாக்
பார்வை
ஒப்பனையோ
ஒப்பேற்றல்களோ எதுவுமின்றி
நிர்வாணமாக
கூச்சமின்றி அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்
ஒளிவுமறைவற்ற சொற்களால்.
கேலியாகவும்
கிண்டலாகவும்
பேசுகிறாய்
சிரிக்கிறாய் கொஞ்சமும் வெட்கமின்றி
பொய்களுக்குள்
உன்னை புதைத்துக்கொண்டு.
பிரசுரிக்கப்பட்ட திகதி: 2006-03-27 00:00