ஊர் கூடி... வாய்ப்பு

01.
ஊர் கூடி...
--------------
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
உறுப்புக்கள் சிதறிக் கிடக்க
கேட்பார் எவருமின்றி
கடற்கரையோரம்
அனாதைப் பிணமாய்
பிள்ளையார்...
விநாயகர் சதுர்த்தி
கொண்டாட்டங்களுக்குப் பிறகு

02.
வாய்ப்பு
---------
தயாராகி விட்டார்கள்
சிறுவர்கள் பிச்சையெடுப்பதற்கும்
இளைஞர்கள் வசூல் வேட்டைக்கும்
அரசியல்வாதிகள் சர்ச்சைகளுக்கும்...
விநாயகர் சதுர்த்தி நெருங்குகிறது

-ஜெ.நம்பிராஜன்

பிரசுரிக்கப்பட்ட திகதி: 2008-08-29 00:00
Share with others