நான்

போகும் வழியில் ஒரு பைத்தியக்காரன்
பொறுமையாக ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான்

சாய்ந்திருக்கும் சுவர்..அவன் முன்னே
குவிந்திருக்கும் குப்பைகள் தவிற
வேறொன்றுமில்லை அவனைச்சுற்றி
இருந்தும் அவன்
பொறுமையாக ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான்...

சிரிப்புத்தான் வந்தது
காகிதங்களுடன் போராடும் என்னை அவன்
ஞாபகப்படுத்தியபோதும்..ஏனோ
எனக்கு சிரிப்புத்தான் வந்தது...
-சாந்தி

பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00
Share with others