- சாந்தி
முதல் ஆசான்
நல்ல நாள் பார்த்து
நெல் பரப்பி
விரல் பிடிச்சி
'அ' எழுத வச்ச ஆத்தாவுக்கு
எழுத படிக்க தெரியாது
எனக்காக யாருகிட்டயோ
'அ' வரைய படிச்சிருந்தா...
பின்னாளில் ஒரு நாளில்
ஆத்தா பேரை எழுதிவச்சி
அவள்முன்னே காட்டினப்ப
வரைபடமா தெரிஞ்ச எழுத்த
தலைகீழாய் பார்த்துபுட்டு
'அழகா எழுதியிருக்கே செல்லம்'- என்று
ஆசையாய் கொஞ்சினப்ப
'தலைகீழாய் வச்சி படிக்கிறியே'-னு
தலையில நான் அடிச்சிகிட்டேன்..
அப்படி நான் புண்படுத்தினது
ஆத்தாவை பாதிக்கவே இல்லை..ஏன்னா
அவளுக்குத் தெரியும்
என்னோட முதல் ஆசானே அவள் தானென்று...
-சாந்தி
பிரசுரிக்கப்பட்ட திகதி: 1998-01-01 00:00