Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: ஆவணி 18, 2010 [ வார இதழ் ]
இன்றுவரை :: 498 கவிஞர்கள் , 2241 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointபதில்களற்ற மடலாடல்
அவனி அரவிந்தன்
red pointபாசமான பாட்டிக்கு...
வே .பத்மாவதி
red pointதமிழுக்கு அமுதென்று பேர்...!
வை. அண்ணாஸாமி
red pointஎன்னுள்ளே
சுடர்விழி
red pointதூயவள்
வல்வை சுஜேன்
red pointபிச்சைக்காரி.. அவ‌ளின் பிர‌ம்ம‌ன்
ராம்ப்ரசாத், சென்னை
red pointஅழும்வரை சிரிப்பேன்.. காதல் ஏக்கம்
கிரிகாசன்
red pointஇறந்து போவது மேலாகும்
ஈழநிலா, இலங்கை
red pointரமளானே வருகவே...!!!
கவியன்பன் கலாம்
red pointஅரங்கேற்றம்
கணபதி
red pointசில நேரங்களில் சில மனிதர்கள்
லதாமகன்
red pointஎல்லாக கண்களையும் இழந்த
தீபச்செல்வன்
red pointவயது வந்தாலென்ன
நவஜோதி ஜோகரட்னம்
red pointபணம்
வேதா. இலங்காதிலகம்
red pointசும்மா கிடைத்ததல்ல.. பிணமென்றே
வித்யாசாகர்
red pointகாணவில்லை
வேல் கண்ணன்
red pointஅடையாளம்
அபிமன்யு ராஜராஜன்
red pointதேர்தல்!!
இமாம்.கவுஸ் மொய்தீன்
விமர்சனங்கள்
red pointஒரு பெண்ணின் முன்னேற்றத்தை இடைநிறுத்தவென சூழும் தடைகளை எதிர்கொள்ள நேர்ந்த ஒரு பெண்ணின் நிலையைச் சொல்கின்றன...
red pointபெண்கள் தம்மைத் தாமே குற்ற உணர்வில் அடைத்துக்கொள்வது பற்றியும் குற்றஉணர்வுகள் தொலையப்பட வேண்டியவை என்பதையும்
red pointகாணாமல் போதல் எங்கள் துயர் சூழ்ந்த வாழ்வின் ஒரு பகுதி. திகிலடர்ந்த எங்கள் பாதையில் எப்போதும் ஒருவன் காணாமல் போய்கொண்டே இருந்திருக்கிறான். எங்களில் ஒருவன் காணாமல் போனான் என்பது ஒவ்வொரு காலங்களிலும் ஏற்படுத்திய அதிர்வுகள் ஒவ்வொரு விதமானவை.
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2007-01-15 
picture for poem
இதயத்தில் கொலு
வேதா. இலங்காதிலகம்
  இவரின் பிற கவிதைகள்
 
இதயத்தில் கொலு.

இனி அப்பாவை நான் காணமுடியாது.
இணைந்த நிழற் படங்கள் வீட்டினில்.
இதயத்தில் கொலுவாக இனிய நினைவுகள்.
இருபத்தி மூன்று மார்கழித் திங்கள்
இரண்டாயிரத்து ஆறின்; காலை விடியலில்
இகத்தில் என்னை உருவாக்கிய தந்தையின்
இனிய சுவாசம் மெது மெதுவாய் நின்றது.
இதமான விடுதலை உயிர்க்கூட்டிற்கு.
00000

எங்கள் வீட்டு மாமரக்குடை அவர்
குன்றாத ஆதரவுக் குடையில் நாம்.
என்றும் சுடரான அறிவும் அன்பும்
நின்று இல்லத்திற்கு. ஒளி தந்தது.
கடற்கரை மணலாய்ப் பல நினைவுகள்.
கலையழகுக் கிழிஞ்சல்களாய்ச் சில நினைவுகள்
கொலுவாக மனதில் அழியாத சொரூபம்.
கொடுக்கிறது சுய ஆளுமையைச் சுயமாக எமக்கும்.
00000

தொண்ணூற்று ஆறில் அம்மா மறைவு.
இரண்டாயிரத்து ஆறில் அப்பா மறைவு.
இணையாக இல்லறம் ஐம்பத்தொரு வருடங்கள்.
இருவரையும் இன்று நிழல் படங்களில்
இணைத்தே பார்ப்பதில்; ஆத்ம திருப்தி.
மரணம் நியதியெனும் அவதானம் கொண்டால்
இரணம் உருவாகாத நிதானம் பெறலாம்.
தருணம் வருகையில் கல்லறைக்கட்டிலே சரணாலயம்.
00000


பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
13-1-07.


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு


 
இவருக்கான விமர்சனம்
உணர்வுப்பூக்கள் மன ஓட்டத்தின் அளவைப் பிரதிபலிக்கின்றன. எளிமை வரிகள், புரிதலான கருத்துக்கள்.. [ஆங்கரை பைரவி]
காலம் கடந்தும்கூட இன்றுவரை தாயக எண்ணங்களே அவரது கவிதைகளில் பெரும்பாலும் பதிவு செய்யப்படுகின்றன.. [என்.செல்வராஜா]
மேலும் ...




சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2009 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்