Vaarppu logo
கவிதை இதயங்களின் துடிப்பு  
  இதழ் :: சித்திரை 28, 2012 [ வார இதழ் ]
இன்றுவரை :: 607 கவிஞர்கள் , 2624 கவிதைகள்
வாசல் கவிஞர்கள் கவிதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் கட்டுரைகள்

new release
கவிதைகள்
red pointபள்ளி மணியோசை
ப.பார்த்தசாரதி
red pointஎன்னை போல.. சிகரெட்டை.. பேர்ல மட்டும்
சத்யா
red pointஅந்த மழைநாளில் .. உன் பெயரை
அ. ஜெயபால்
red pointகருவறை.. தலைமுடி
வசிகரன்.க
red pointவாழ்க்கை எதார்த்தம்
ராசை நேத்திரன்
red pointகால்சட்டையின்.. இன்றைய சுடுகாடொன்றில்
வித்யாசாகர்
red pointபாம்புகள் குளிக்கும்.. கடலும் கடவுளும்
ஈழநிலா, இலங்கை
red pointநிலவில்..ஏன்?.. கறுப்புப் பணம்.
முத்து ரத்தினம்
red pointகுழந்தைச் செல்வங்கள்
வேதா. இலங்காதிலகம்
red pointநாடோடிகள் தொலைத்த வரைபடம்
குருசு.சாக்ரடீஸ்
red pointகாதல் கீதம்..நீலக் கடலின்.. தேவனின் தேவை
சின்னு (சிவப்பிரகாசம்)
red pointஇலக்கணம்.. விடியல் காணாத விழிகள்
மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
red pointசைக்கிளும் சிறுவனும்
ஆஷிகா கொழும்பு
red pointசுதந்திரம்.. புறக்கணிப்பு..
மன்னார் அமுதன்
red pointஉழைப்பாளர்.. தாயென்பேன்.. எப்படி?
முனைவென்றி நா சுரேஷ்குமார்
red pointசிரிப்பதும்.. வேண்டும்,, மழை நின்ற
கிரிகாசன்
red pointகண்களை மூடும் காட்சிகள்
தீபிகா
red pointஎன்ன கண்டாய்?
ரௌத்திரன்
விமர்சனங்கள்
red pointஇதுவரையும் கருத்தியலில் முதன்மைப்பட்டிருந்த கருணாகரன், அரசியல் நிலவரங்களைக் கவிதையில் குவியப்படுத்தி வெளிப்படுத்திய அவர், இந்தத் தொகுதியில் அழகியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளார் ...
red pointஇந்தக் கவிதைகளில் படிமம், குறியீடு, அழகியல் என்ற வழக்கமான கவிதைகளுக்கான கல்யாணக்குணங்களைத் தேடுபவர்கள் ஏமாந்துப் ...
red pointகவிதைத் தொகுதியில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள், காதல், அழகியல் போன்றவை பாடுபொருள்களாக விரவிக் காணப்படுகின்றன
redangleநிகழ்வுகள்
redangleபடமும் வரிகளும்
redangleசரம்
redangleThanks for the pictures

 
வாசல்  >  கவிதைகள் பிரசுரிக்கப்பட்ட திகதி:2010-06-22 
picture for poem
விடை பெறுதல்
றஹீமா-கல்முனை
  இவரின் பிற கவிதைகள்
 
விடை பெறுதல்...
---------------------------

நமது பயணங்கள்
உடைவுகளோடு.....
இப்படியே முடிந்துவிடுகிறது..!

துண்டு..துண்டாய்
எத்தனை சினேகிதிகள்!!

பல்கலைகழக
கன்ரீன் முற்றத்து
வாசகங்கள்
இன்னும் நினைவிலுண்டு....
நாம் நாமாக
நமக்காக இருந்தோம்....

அடர்ந்த பற்றைகளோடு
அழுக்கேறிய கற்களோடும்
அந்த மரத்தடியை
நாம் ஐவருமே
அழகாக்கினோம்

பரீட்சை
முடிந்தகையோடு
அவசரமாய் விடைபெற்றோம்
ஆற்றமுடியாத அழுகையோடு...

புகைப்படங்களும்
ஆடோக்ராப்களுமாய்
கடைசிநாளின் கலவரம்
இன்னும் நினைவிலுண்டு..

நீண்ட
இடைவெளிகளின் பின்னரான

தொலைபேசியின்
அறுவைகள்
எஸ்.எம்.எஸ். ஆய்
உருமாறிக்கடைசியில்
காணாமல்போயிற்று...

வருகிற
திருமண அழைபிதழளுக்கு
'ஸாரி'
சொல்லி வாழ்க்கை ...
அலைகிறது

குழந்தையின்
அழுகையை நம்
புகைப்படங்கள்
நிறுத்திக்கொண்டிருக்கிறதாம்
நிஜமா????

நம் சந்திப்புகள்
எதிர்பாராமல்
எப்போதாவது நடந்துவிடுகிறது....
ஒரு அதிசயம்போல

குழந்தைகளோடு...
பொறுப்புள்ள உம்மாவாய்
ருமைசாவும்..!

படிப்போடு
பிடிவாதமாய் இருக்கும்
அக்மலும்.....

கணவரின்
மார்க்கக்கடமையில்
கருத்தாய்...
சிஹானா!!!

அவசர அவசரமாய்
திருமணமாகி.....
காணமல்போன
ஸீனத்...

நாங்கள்
கடைசிநாளிலேயே
தொலைந்துவிட்டோம்...!!!

இப்போதெல்லாம்
நாங்கள்
புகைப்படங்களில்
மட்டுமே
ஒன்றாயிருக்கிறோம்...!!!!


கருத்து எழுத விரும்புகிறீர்களா?
நுழைவதற்கு | இணைவதற்கு
வாசகர்களின் கருத்துக்கள்
பெயர்
  saabras   நாடு   Sri Lanka
தளம்
    திகதி   2010-06-25
[1]
ரஹீமா, ஒவ்வொரு முறையும் வார்ப்புக்குள் நுழையும்போது உங்களது கவிதைகளை படிக்க்க தவறுவதில்லை
அந்தளவுக்கு உங்களது கவிதைகள் அனைத்தும் வாழ்வின் நிஜங்களை யதார்த்தங்களை அப்படியே பேச்சு மொழியில் நேர்த்தியாக சொல்கிறது
நீங்கள் மேலும் மேலும் கவிதைகளை எழுத வேண்டும் .உங்களது கவிதைகள் வெளியாகும் கால இடைவெளி அதிகமாக இருக்கிறது அதை குறைத்து
அதிகமான கவிதைகளை வாசகர்களுக்கு வழங்குங்கள் .
 
பெயர்
  raheema faizal   நாடு   Sri Lanka
தளம்
    திகதி   2010-09-15
[2]
கருத்துக்கும் ,ஆலோசனைகளுக்கும் நன்றி
 


 

கருத்துக்கள் (3)



சேமித்து வைக்க


உங்கள் கவிதைகளையும் பிரசுரிக்க விரும்பினால் ...
 
1998 - 2011 vaarppu.com - a magazine for Tamil poems.   powered by
யாதும் ஊரே யாவரும் கேளிர்